புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 05, 2022)

தற்போது செய்யப்பட வேண்டியவைகள்

1 பேதுரு 5:7

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.


ஒரு மனிதனானவன், தான் வேலை செய்யும் இடத்திலே, ஏற்பட்ட கருத்து முரண்டபாட்டினால், சக ஊழியனொருவனை அடித்து, சண்டை செய்த தால், கட்டுப்பணம் எதுவுமின்றி வேலையிலிருந்து நீக்கப்பட்டான். அது மட்டுமல்லாமல், அவனுக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டவன் என்று வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்ததால், அவன் வெறெங்கும் புதிய வேலையை எடுக்க முடியாதவனாக இருந்தான். இதினிமித்தம் தன் கடந்த காலத்தை குறித்து துக்கித்துக் கொண்டிருந்த அந்த மனிதனானவன், தன் பிள்ளைகளின் எதிர் காலத்தை குறித்து கவ லையடைந்தான். அறிந்தோ, அறி யாமலோ எல்லா மனிதர்களு டைய இது போன்ற வாழ்விலும் தவறுகள் நடப்பதுண்டு. மனிதனுடைய சிந்தனையோ எப்போதும் கடந்த காலத்தைக் குறித்தும் அல்லது எதிர் காலத்தைக் குறித்துமாகவே இருக்கின்றது. மேலே கூறப்பட்ட சம்பவ த்திலுள்ள மனிதனானவன், தன் சக ஊழியனோடு கருத்து முரண்பாடு ஏற்படும் போது, அந்த சமயத்திலே, சரியானதை செய்திருந்தால், அவன் இப்போது கவலையடையத் தேவையில்லை. ஆனால், இப்போதும் கூட அந்த மனிதனானவன் தன் வாழ்விலே, கடந்த காலத்தையும், எதிர்கா லத்தையும் குறித்து நொந்து கொண்டிருப்பதால், நிகழ்காலத்திலே, நேர்த்தியாக செய்யப்பட வேண்டியவைகளைக் மறுபடியும் தவற விடுகி ன்றவனாயிருப்பான். நடந்தவைகள் முடிந்தவைகள். அவைகளூடாக நாம் கற்றுக் கொண்ட பாடங்களை, தற்காலத்திலே நாம் எடுக்கும் தீர்மான ங்களுக்கு அவை அடித்தளமாக அமைக்க வேண்டும். செய்த குற்றத் தாலோ அல்லது செய்யாத குற்றத்தாலே வழி தெரியாமல் தவிக்கும் போது, தேவனுடைய வார்த்தையை தியானியுங்கள். முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்தி க்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந் தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன் என்று கர்த்தர் கூறியி ருக்கின்றார். இனி நடக்க இருப்பவைகள் நாம் அறியாதவைகள். கவ லைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழ த்தைக் கூட்டுவான்? ஆகையால் நாளைக்கா கக் கவலைப்படாதி ருங்கள்;. அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். நம் வழிகளை கர்த்தருக்கு ஒப்புவிப்போம். நம்முடைய தேவை களை அறிந்த கர்த்தர் நம் குற்றங்களை மன்னித்து, புதிய வழிகளை திறந்து தருவார.

ஜெபம்:

கடந்தவைகளையும், இனி வருகின்றவைகளையும் நினைத்து சோர்ந்து போகமல், இப்போது உம்முடைய சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்றி முடிக்க எனக்கு பெலன் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:25-32