புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 03, 2022)

சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே

2 கொரிந்தியர் 11:19

நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே.


சிறு பிரயாத்திலிருந்தே தேவபக்தியுடன் வாழ்ந்து வந்த மனிதனானொருவனின், வாழ்க்கைப் படகிலே, பெரும் புயல்காற்றுகள் மோதியிருந்த நாட்கள் இருந்தது. உள்நாட்டு யுத்தத்தினால், தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்பட்ட அளப்பெரிய பொருளாதார நஷ்டங்களை அவன் சகித்திருந்தான். உறவுகள் மத்தியிலே உயிர் இழப்பு நேரிட்ட போதும், அத்தகைய ஆழமான இழப்புக் களிலும் விரக்தியடைந்து போகா மல், பழிக்கு பழிவாங்க வேண்டும் என்று எண்ணமற்றவனாய், எல்லாவற்றறையும் தேவனு டைய கரத்திலே கொடுத்து 'நீர் அறி யாமல் எனக்கு எதுவுமே நேரிடுவதில்லை' என்று யாவையும் கர்த்தருடைய கரத்திலே ஒப்புக் கொடுத்து, பயங்கரமான சூழ்நிலை க ளைத் தாண்டி வந்த நாட்கள் அவன் வாழ்க்கையிலே உண்டாயிருந்தது. ஒருநாள் பல அழுத்தங்களால், அவன் நெருக்கப்பட்டிருக்கின்ற வேளை யிலே, இவனுடைய நிலைமையை அறியாத, சக விசுவாசியொருவன், வழக்கம் போல நகைச்சுவையாக பேசும் போது, ஒரு வார்த்தை அவன் இருதய த்தை ஊடுருவிச் சென்றது. அதனால், அவன் மிகுந்த கோபமடைந்தவனாய், கடுமையான வார்த்தைகளினாலே அந்த சக விசுவாசியை கண்டித்து அதட்டினான். அந்த விசுவாசியைக் குறித்த கசப்பு அவன் உள்ளத்திலே வளர ஆரம்பித்தது.இந்த சம்பவத்தின் தார்பரியத்தை ஆராய்ந்து பார்பீர்களானால், உண்மையிலே அந்த மனிதனானவனுடைய மன அழுத்தத்தின் காரணங்கள் வேறாக இருந்தது, ஆனால், அவன் அந்த அழுத்தங்கள் யாவற்றையும், வாய் தடு மாறி பேசிய அந்த சக விசுவாசியின்மேல் போட்டுவிட்டான். ஆனால், அவன் கடந்து வந்த பாதைகளை பாருங்கள். எத்தனையோ பெரியதான நஷ்டங்களை சகித்துக் கொண்ட அந்த மனிதனானவன், இந்த சின்ன காரியத்தை வெகுவாய் தூக்கி சுமக்கின்றவனானான். ஆம், பிரியமான வர்களே, இத்தகைய சூழ்நிலைகள் நம்முடைய வாழ்விலே நாம் சந்திக்கின்றோம். வேதம் கூறும் பிரகாரமாக, ஒருவன் உங்களைச் சிறையா க்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே. எனவே, அற்பமான காரியங்களினாலே உங்கள் நற்சாட்சியான வாழ்க்கையை இழந்து போகாதபடிக்கு, பொறுமையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

மனதுருகி மன்னிக்கின்ற தேவனே, பெலவீனமான நேரங்களில் தீமையான சிந்தைகள் என்னை மேற்கொள்ளமல், தீமைகளை நன்மையினாலே வெல்லும்படியாக என்னை பெலப்படுத்தி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:19