புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 02, 2022)

உள்ளான மனிதன் புதிதாக்கப்படட்டும்

2 கொரிந்தியர் 4:16

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக் குநாள் புதிதாக்கப்படுகிறது.


பல சவால்கள் மத்தியிலே மிக அதிகமாக பிரயாசப்பட்டேன். அநேக நன்மைகளை செய்தேன். இப்போது மிகுதியான விசாரத்தினாலும், கிலேசத்தினாலும் நிறைந்திருக்கின்றேன். என் மனதிலே மிகுந்த கசப்பு உண்டாயிருக்கின்றது என்று தேவ ஊழியங்களிலே மிகவும் ஒத்தாசை யாக இருந்த விசுவாசியாவன் தன் மேய்ப்பனானவரிடம் தனக்கு உண்டா யிருக்கும் மனவேதனையை கூறினான். அந்த சபை மேய்ப்பனானவரோ, மிக வும் அனுபவமிக்கவராக இருந்ததால், அவன் கடந்து செல்லும்; சூழ்நிலைக்கு அந்நியரானவரல்ல. எனவே அவ னுடைய நிலைமையை நன்றாக உணர்ந்தவராய் அவனை நோக்கி: மகனே, இன்று நான் உன்னை நோக்கி, நீ அப்படியாக என்ன நன்மைகளை செய்தாய் என்று கேட்டால், உனக்கு ஞாபகத்திலே இருக்கும் பெரிய காரியங்களை குறிப்பிட்டு சொல்வாய். உன்னுடைய எல்லா பிரயாசங்களையும் நீ கூட அறிந்திருக்கமாட்டாய், ஆனால், நம்முடைய ஆண்டவ ராகிய இயேசுதாமே, சிறிதும் பெரிதுமான உன் எல்லாப் பிரயாசங்களையும் கணக்கில் வைத்திருக்கின்றார். உன் பொறுமையையும், இயேசுவின் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்ட நாட்களை அவர் மறந்து போவதற்கு அவர் மனிதனல்லவே. அதிசீக்கிரத்தில் நீங் கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. உன்னை தமக்கென்று பிரித்தெடுத்தவர் உனக்குள் வசிக்கின்றார். நீ அவரிடம் பேசு. அவர் உன்னை ஆற்றித், தேற்றி, திடப்படுத்தி, மறுபடியும் நீ இன்னும் உற்சாகமாய் செயற்பட உதவி செய்வார் என்று பதிலளித்தார். ஆம் பிரியமானவர்களே, இனி வரவிருக்கும் நித்திய கனமகிமையை குறித்த வாஞ்சை உங்கள் மனதிலே பெருகின்றதா? அந்த கிரீடத்தின் மேன்மை இன்னதென்பதை உணர்ந்து கொள்கின்றீர்களா? நாம் ஓடும் ஜீவ ஓட்டத்தின் பந்தையப் பொருள் நிச்சமானது என்ற எண்ணம் உங்களில் இருக்கின்றதா? சோர்ந்து போய், இளைப்படையும் வேளைகளிளெல்லாம், உங்களுக்கு முன் பாக வைக்கப்பட்டிலுக்கும் அந்த நித்திய கன மகிமையை உங்கள் விசுவாசக் கண்களால் அதை காணும்படிக்கு, பிரகாசமுள்ள மனக் கண் களை தேவன் தந்தளும்படிக்கும், உள்ளான மனிதன் புதிதாக்கபடும்படிக்கும் அவரை வேண்டிக் கொள்ளுங்கள். அழைத்தவர் உண்மையு ள்ளவர். அவர் வாக்கு மாறாதவர்.

ஜெபம்:

என்றென்றைக்கும் மாறாத தேவனே, என் பெலவீனங்களின் நிமித்தம் என்னை தள்ளிப்போடாமல், என்மேல் உம் கண்ணை வைத்து உம் ஆலோசனைனை தந்து என்னை நேரிய வழியில் நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 11:23-28