புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 01, 2022)

வெற்றித் திருநாள்

1 கொரிந்தியர் 9:25

நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.


உலகளாவிலே விளையாட்டுப் பந்தையப் போட்டி ஆரம்பமாவதற்கு முன் னர், அந்தப் போட்டியிலே சிறந்து விளங்கும் விளையாட்டு வீரனு க்கு, தமது தேச மட்டத்திலே பெரிதான கௌரவமும், பெருந்தொகையான ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படும் என்று ஒரு குறிப்பிட்ட தேசமொன்றின் அதிகாரியினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேச த்தைச் சேர்ந்த விளையாட்டு வீரனொருவருன், தான் வெற்றி பெற்று, அதி காரிகள், மக்கள் முன்னிலையில் கௌ ரவிக்கப்படும் காட்சியை தன் கண் முன்னே விஸ்வரூபமாக்கி மனதிலே பதியவைத்தான். தனக்கு முன்சென்று இத்ததைய கனத்தையும், பரிசுப் பொருட்களையும் பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள் எப்படியாக வெற்றி பெற்றார்கள் என்பதையும் அவன் அறிந்து கொண்டான். அதனால், தேசத்தினால் அறிவிக்கப்பட்ட கௌரவ விழாவும், பரிசுப் பொருட்களும் வெறும் பேச்சல்ல என்னபதையும் உறுதியாக அறிந்திருந்தான். பல சிரமங்கள், சவால்கள் மத்தியிலும், பல தியாகங்களைச் செய்து, சிறந்த முறையிலே பயிற்சிகளை எடுத்து, தான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பந்தையப் போட்டிகளிலும், மிகவும் உற்சாகத்துடனும், கவனத்துடனும் பங்கு பற்றினான். அவனுடைய கண்கள் அவனது இலக்கின்மேல் இருந்தது. அவன் அந்த இலக்கை தான் அடைய வேண்டும் என்று அதைப் பின்தொடர்ந்து, அதைப் பெற்றுக் கொண்டான். போட்டிகள் முடிந்து தன் தாய்நாட்டிற்கு திரும்பும் போது, அவனை வரவேற்கும்படிக்கு, அதிகா ரிகளும் பிரமுகர்களும் செங்கம்பள வரவேற்போடு காத்திருந்தார்கள். பெருந்திரளான ஜனங்கள் கரகோசங்களோடு, அந்த வெற்றி வீரனை வாழ்த்தும்படி திரண்டு வந்தார்கள். இது கனவா அல்லது நினைவா என்று அவன் உள்ளத்திலே சொல்ல முடியாத ஆனந்தம் பொங்கி வழிந்தது. பிரியமானவர்களே, இவர்களோ அழிவுள்ள கிரீடத்தையும், கனத்தை யும், பொக்கிஷங்களையும் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தையும், ஈடு இணையில்லாத மகிமையையும் பெறும்படிக்கு இலக்கை நோக்கி தொடர்கின்றோம். நம்முடைய அதிசய மான ஒளிமயமான தாய் நாடாகிய பரலோகத்திலே, ஜீவ கிரீடம் சூடும் நேரம் பேரின்பமான நேரம். நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் தாமே தம்முடைய பிரசன்னமாகுதலை விரும்பி அவரை நாடித் தேடும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். எனவே சோர்ந்து போகாமல், உறு தியோடு, நமது நித்தியமான இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வோமாக.

ஜெபம்:

உம்முடைய ராஜ்யத்திற்கென்று என்னை வேறுபிரித்த தேவனே, பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, எனக்கு முன்னி ருக்கும் ஜீவ இலக்கை நோக்கி முன்னேறும்படிக்கு என்னை பெலப்படுத்தி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 4:7-8