புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 29, 2022)

ஜெயங்கொள்ளுகின்றவர்களாயிருங்கள்

வெளிப்படுத்தல் 21:7

ஜெயங்கொள்ளுகிறவன் எல் லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான், நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.


தேவனாகிய கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட எலியா என்னும் தீர்க்கதரிசி, ஒரு சமயம், நாட்டின் அரசனாகிய ஆகாப்பின் மனைவி தன்னை கொன்று போடுவாள் என்று பயந்து தன் பிராணனை காக்கும்படி ஓடிப்போனான். அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலி யாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்த ருக்காக வெகு பக்திவைராக்கிய மாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள் ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீட ங்களை இடித்து, உம்முடைய தீர் க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவ ன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடு கிறார்கள் என்றான். அதற்கு கர்த்தர் மறுமொழியாக: முதலாவது, அவன் இன்னும் செய்ய வேண்டிய வேலைகளை அவனுக்கு கட்டளையிட் டார். பின்பு அவனை நோக்கி: அந்நிய தேவர்களுக்கு முடங்காதிருக் கிற முழங்கால்களையும், விக்கிரகங்களை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய் களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக் கிறேன் என்றார். பிரியமானவர்களே, உலகத்திலே நடக்கின்ற காரியங் களை பார்த்து, ஒருவேளை நீங்கள் மட்டும்தான் பக்தி வைராக்கியமாக இருக்கின்றேன் என்று கருதினாலும், அப்படியே சோர்ந்து போகாமலும், பின்னிட்டு போகாமலும், தேவனுக்குள் உறுதியாயிருங்கள். அது உங்க ளுக்கு உண்டான பாக்கியம் என்று எண்ணிக் கொள்ளுங்கள். பரலோக ராஜ்யத்தை, பெரும் புதையல் பொருளைப் போல தேடி பின் பற்றுங் கள். உங்களை மட்டுமல்ல, தேவனாகிய கர்த்தர்தாமே தமக்கெ ன்று பக்திவைராக்கியமுள்ள தம்முடைய பிள்ளைகளை தமக்கென வைத்திரு க்கின்றார். அநியாயஞ் செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செ ய்யட்டும்; அசுத்தமா யிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவ னவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று நம் முடைய ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, சூழ்நிலை களை கண்டு சோராமல், உறுதியோடு முன்னேறிச் செல்லுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று வேறுபிரித்தவரே, உலகத்தில் நடக்கும் அநியாயங்களை கண்டு, சோர்ந்து போகாதபடிக்கு உம்முடைய சித்தத்தை நிறைவேற்றி முடிக்க எனக்கு பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:7-8