புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 27, 2022)

வஞ்சிக்கப்பட்டு போய்விடாதிருங்கள்

மத்தேயு 7:13

இடுக்கமான வாசல் வழி யாய் உட்பிரவேசியுங்கள்;


அந்த நாட்டைப் பாருங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்த கட்டிடங்கள் மூடப்பட்டு, விற்பனையாகின்றது. அதை வேற்று மார்க்கத்தினர் கொள்வனவு செய்கின்றார்கள். உறுதி செய்யப்பட்ட தரவுகள் இங்கே உள்ளது. இதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். மேலும், தங்கள் தேசமானது கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கொள்கையில் ஸ்தா பிக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்ட அந்த தேசத்தைப் பாருங்கள், திருமணத்திற்கு கூட, புதிய வரைவிலக்கணத்தை கொடுத்து, அதை சட்டபூர் வமாக்கி, தெருக்களிலே அவைகளை கெம்பீர சத்தத்தோடு கொண்டாடி வருகின்றார்கள். கிறிஸ்தவ கொள்கைகள் அசைக்கப்படும் இந்நாட்களிலே, எங்களுடைய மார்க்கத்தைப் பாருங்கள், அது வளர்ந்து கொண்டே போகி ன்றது என்று ஒரு மனிதனானவன் ஒரு பயபக்தியுள்ள கிறிஸ்தவனிடம் கூறினான். இப்படியாக கிறிஸ்துவுக்கு விரோதமாக பேசும் பேச்சுக்களை நீங்களும் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட பேச்சுகளிலே சில உண்மை கள் உண்டு ஆனால் நீங்களோ சற்றும் மனம் தளர்ந்து போய்விடாதிருங்கள். நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட் களிலும் நடக்கும். விசுவாசத்தினாலே நோவா தன்னுடைய நாட்களி லே இன்னும் காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தி யுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று அறிந்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். அந்நாட்களிலே, நோவா ஒருவன் மாத்திரம் நீதியைப் பிரசங்கித்தவ னாக இருந்தான். ஆனால் அங்கிருந்தவர்கள் எவருமோ அவனுடைய வார்த்தைக்கு செவி கொடுக்கவில்லை. அவனுடைய குடும்பத்தார் எட்டு ப்பேர் மாத்திரம் காப்பாற்றப்பட்டார்கள். (2 பேதுரு 2:5). தேவனாலே, சிருஷ்டிக்கப்பட்டு, தேவ எச்சரிப்பை பெற்ற மற்றயவர்களோ, நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்துக் குடித் தார்கள், பெண்கொண்டு, கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். கடைசி நாட்களிலே, கள்ளத் தீர்க்கதரிசிகள் எழுந்து கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். தேவனுடைய பிள் ளைகளே, நீங்களோ, எண்ணிகைகளையும், புள்ளிவிவரங்களையும்;; கண்டு கலக்கமடையாமல், விசுவாசத்திலே உறுதியாயிருங்கள்.

ஜெபம்:

கடைசிக் காலத்தைக் குறித்து முன்னறிவித்த தேவனே, நான் வஞ்சிக்ப்பட்டு போய்விடாதபடிக்கு, நித்திய ஜீவன் தரும் இடுக்கமான வாசாலை கண்டுபிடிப்பவனாக இருக்க பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 24:21-26

Category Tags: