தியானம் (ஐப்பசி 26, 2022)
உபதேசத்தில் தரித்திருங்கள்
அப்போஸ்தலர் 2:42
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்
மாலை வேளைகளிலே, சில வாலிபர்களாக சேர்ந்து, ஊரின் கடை முனையிலே இருக்கும் ஒரு மைதானமொன்றிலே விளையாடி வருவது வழக்கமாக இருந்து வந்தது. விளையாட்டு முடிந்ததும், அவர்கள் குழுவாக வீடு திரும்பும் போது, சில வேளைகளிலே, நேரடியான வீதி வழியாக செல்லாமல், சீக்கிரம் வீடு செல்ல வேண்டும் என்று வயல்வெ ளிகளுள்ள ஒரு குறுக்கு பாதை வழி யாக செல்வதுண்டு. அதை அறிந்து கொண்ட பெற்றோர்களில் சிலர், அவ ர்களை நோக்கி, குறுக்கு பாதையை பாவிப்பதை தவித்துக் கொள்ளும்ப டியும், அவ்வழியிலே வீணரான மனு ஷர்கள் இருக்கின்றார்கள் என்று அறி வுரை கூறி வந்தார்கள். அந்த வாலி பர்களின் உள்ளத்திலே அல்லது நடத்தையிலோ எந்த தவறான நோக்கமும் இருக்கவில்லை. அவ ர்கள் குறுக்கு வழியாலே வரும் போது, துன்மார்க்கத்தில் வாழும் சில வீண ர்களை காண்பதுண்டு. ஆனால், அந்த வீணர்கள், தாங்களும் தங்கள் பாடுமாக இருப்பதைபோலவே காணப்பட்டார்கள். அதனால், இந்த வாலிபர்கள் தங்கள் பெற்றோர் அந்த மனுஷர்களைக் குறித்து தவறான எண்ணம் வைத்திருக்கின்றார்கள் என்று எண்ணி, பெற்றோரின் அறிவு ரையை கருத்தில் கொள்ளவில்லை. ஆனால், அந்த வீணர்கள், வாலி பர்கள் குழுவாய் வருவதால் ஒன்றும் செய்ய முடியாது என்று, அவர்க ளில் சிலர் தனித்து வரும் நாளை ஆவலாய் எதிர்பார்த்திருந்தார்கள். அப்படியாக, ஒருநாள் அவர்களில் இரண்டு வாலிபர்கள் அவ்வழியாக துரிதமாக சென்று கொண்டிருக்கும் வேளையிலே அந்த வீணரான மனிதர்கள் அவர்களை பிடித்து அடித்து, அவர்களிடம் இருந்த சொற்ப பணத்தையும், அவர்களிமிருந்த கைத்தொலைபேசிகளையும் பறித்து விட்டு காயங்களுடன் அவர்களை விரட்டிவிட்டார்கள். பிரியமானவர் களே, உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று எப்பொழுது சந்தர்ப்பம் தனக்கு கிடைக்கும் என்று சுற்றித்திரிகின்றான். நீங்கள் குழுவாய் ஐக்கியமாய், சபையிலே இருக்கும் போது, உங்களை மேற்கொள்வது அவனுக்கோ மிகவும் கடினம். ஆனால், நீங்கள் சுதந்திரம் வேண்டும், தனிப்பட்ட வாழ்க்கை வேண்டும் என்று உங்களை தூரப்படுத்தும் போது, பிசாசா னவன் உங்களைத் தந்திரமாக தன் வளைக்குள் சிக்க வைத்து விடு வான். எனவே நீங்கள் சபை ஐக்கியத்திலே உறுதியாய் இருங்கள்.
ஜெபம்:
என் தேவனாகிய கர்த்தாவே, சத்துருவானவனுடைய கண்ணிக்கும் பாழாக்கும் சங்காரத்திற்கும் நான் என்னை சிக்கவைக்காதபடிக்கு, ஐக்கியத்திலே உறுதியாய் நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 பேதுரு 5:8