புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 25, 2022)

யாரைக் கனம் பண்ணுகின்றீர்கள்?

மத்தேயு 10:40

ஆண்டவர் இயேசு: உங் களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்;


ஒரு நாட்டின் அரசனானவன், தன்னுடைய சேவகர்களின் ஒருவனை அழைத்து, தன் நாட்டிலுள்ள ஒரு ஊருக்கு சென்று அங்குள்ள மனித ர்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று செய்தியை கூறும்படிக்கு அவனிடத்திலே ஒரு நிரூபத்தை கொடுத்து, அவனை தன் பிரதிநிதியாக நியமித்து, அந்த நிரூபத்திற்கு அரச முத் திரையைபோட்டு, அவனை அனுப் பினான். அந்த சேவகனோ, அரசனா னவனிடத்தில் பெற்றுக் கொண்ட கட்டளையின்படி, குறிப்பிடப்பட்ட ஊருக்கு சென்று, அரசானவனு டைய செய்தியை கூறினான். அங் குள்ளவர்கள், எங்களுக்கு அரசனை தெரியும், நீ யார் எங்களுக்கு இப் படிப் கூறுவது என்று சொல்லி, அவனை அவமானப்படுத்தி, தங்கள் ஊரைவிட்டு துரத்திவிட்டார்கள். பிரியமனாவர்களே, அந்த ஊரார் உண்மையிலேயே யாரை அவமானப்படுத்தியிருக்கின்றார்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த பிரதிநிதியை மட்டுமல்ல, அவனை அனுப்பிய அரசனானவனை அவமானப்படுத்தினார்கள். ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும் போது, அவர் களை நோக்கி: 'உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பி னவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.' என்று கூறினார். ஆண்டவராகிய இயேசு தாமே நம்முடைய பிரதான மேய்ப்பனாக இருக்கின்றார். அவர்தாமே, பரிசுத்தவான்களாக அழைக்கப்பட்ட நாம் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போ ஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷ கராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். எனவே, பிரதான மேய்பப்பனை கனப்படுத்த விரும்புகின்றவர்களும், அவருடைய சத்தத்திற்கு செவிகொடுக்க விரும்புகின்றவர்களும், தங்க ளுக்கென்று நியமிக்கப்ட்ட சபையின் மேய்ப்பனுக்கு செவி கொடுக்கி ன்றார்கள். ஒரு விசுவாசியானவன், தான் இணைந்திருக்கும் சபையா னது, தேவனானவர் தனக்கு நியமித்த சபை என்று ஏற்றுக் கொண்டால், அவன் அந்த சபையின் அதிகாரங்களுக்கு முற்றாக கீழ்படிய வேண்டும். தேவன் ஏற்படுத்தியவர்களை நாம் கனம்பண்ணும் போது, நாம் தேவனை கனம் பண்ணுகின்றவர்களாயிருப்போம்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கு என்னை வழிநடத்தும் தேவனேஇ உம்முடைய வார்த்தைகளுக்கு நான் கீழ்படிவுள்ளவனாக சாட்சியாக வாழும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 20:21-23

Category Tags: