புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 23, 2022)

ஐக்கியத்தினால் உண்டாகும் நன்மைகள்

எபிரெயர் 10:25

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்;


ஒரு விசுவாசியானவன், சில ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சபைக்கு ஒழுங்காக சென்று கொண்டிருந்தான். ஒரு நாள் அந்த விசுவாசியின் முகநாடி வேறுபட்டிருப்பதை சபையின் போதகரும், அந்த விசு வாசியோடு நல்லுறவாக இருந்த சில விசுவாசிகளும் அவதானித் தார்கள். அந்த விசுவாசியானவன், தன்னுடைய பிரச்சனையை குறித்து யாருடனும் பேச விரும்பமற்றவனாக இருந்தான். ஆனால், அந்த சபை யிலே, அனுதினமும் ஜெபத்திலே தரித்திருந்து, மற்றவர்களுக்காக பரி ந்து பேசி ஊக்கமாக ஜெபிக்கும் சகோதர சகோதரிகள் சிலர் இருந் தார்கள். அவர்கள் அந்த விசுவாசி யோடு எதைக் குறித்தும் பேசவில் லை ஆனால், அந்த விசுவாசிக்காக அனுதினமும், ஊக்கமாக ஜெபம் செய்ய ஆரம்பத்தார்கள். அவ்வப்; போது அந்த விசுவாசியானவன் சபை கூடுதலிலே காணப்படாமல் இருந்தான். சபையிலே இருந்த ஜெபவீரர்கள் பரிந்துபேசி வேண்டுதல் செய்வதில் ஒயாமலிருந்தார்கள். சில மாதங்களுக்கு பின்பு, அந்த விசுவாசியானவன் சபை நடுவிலே, தேவன் தன் வாழ்வில் செய்த அதிச யமான செயல்களைக் குறித்து சாட்சி கூறி, தேவனை மகிமைப்படு த்தினான். அதைக் கண்டு கொண்ட சபையோர் யாவரும் தேவனை ஸ்தோத்தரித்தார்கள். ஆண்டவர் இயேசு இந்த உலக்திற்கு வந்து தம்முடைய திருப்பணியை செய்து முடித்து, பரலோகம் சென்று 2000 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட பின்னரும், சிலர் இன்றைய நாட்களிலே அங்காங்கே சபை கூடிவருதல் அவசியமில்லை என்றும், கர்த்தருடைய நாளிலே ஞாயிறு ஆராதனைக்கு செல்வது முக்கியமானதல்லவென்றும் புதிதானதும், தங்கள் வசதிக்கேற்ற உபதேசங்களையும் பிரசங்கிக்கின் றார்கள். சபை ஐக்கியத்திற்கு சென்று வருவதால் உள்ள ஒரு நன்மை யைபற்றி இன்று நாம் அறிந்து கொண்டோம். இப்படியாக பல நன்மை களை தேவனாகிய கர்த்தர் சபை வழியாக நமக்கு கொடுத்து வருகி ன்றார். அதிமேன்மையாக, குறித்த காலத்திற்கு நம் ஆத்துமாவிற்கு தேவையான ஆன்மீக போஜனமாகிய திவ்விய வார்த்தைகளை சபை வழியாக நமக்கு கொடுத்து வருகின்றார். ஆதலால், அன்புக்கும் நற்கிரி யைகளுக்கும் நாம் ஏவப்ப டும்படி ஒருவரையொருவர் கவனித்து. நாளானது சமீபித்துவரு கிறதினால், சபை ஒன்றுகூடலிலே ஊக்கமாக கலந்து கொண்டு, கிறிஸ்துவுக்குள்ளே வளர்ந்து பெருகுவோமாக.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே சத்தியத்தின அறியும் அறிவை கொண்ட நாம், மறும்படியும் புதிதானதும் நம்முடை வசதிகளுக்கேற்ற உபதேசங்களை பின்பற்றாமல், கிறிஸ்துவிலே நிலையாய் தரித்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:11-15