புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 22, 2022)

இப்போது எதை விதைக்கின்றீர்கள்?

வெளிப்படுத்தல் 2:5

மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக;


தாத்தா, நீங்கள் கடந்த ஆண்டிலே விதைத்து அறுத்த சில நெல் மூடை கள் இன்னும் இருக்கின்றதே, அப்படியானால், ஏன் நீங்கள் மறுபடியும் உழுது விதைக்கின்றீர்கள் என்று ஒரு சிறுபையனானவன், விவசாயி யாக இருந்த தன் பாட்டனாரிடம் கேட்டான். அதற்கு அவர் மறுமொழி யாக: தம்பி, நம்மிடத்திலே தற்போது வைப்பிலே இருப்பது, கடந்த ஆண் டின் நமது பிரயாசத்தின் பலன். நாம் இப்போது பிரயாசப்பட்டால் தான், விளைச்சலில்லாத குளிர் நாட்களைக் கடந்து அடுத்த ஆண் டிற்கும் போது மான பலன்களை அறு வடை செய்ய லாம் என்று அவர் தயவாக கூறி னார். ஆம், ஆண்டவர் இயேசுவை அறிந்த கொண்ட ஆரம்ப நாட்களிலே நன்றாக ஓடியவர்கள், தற்போது இந்த பூவுலகிலும்கூட பலன்களை கண்டடைகின்றார்கள். அந்த பலன்கள் கட ந்த காலத்தின் பிரயாசங்கள். சிலர் அதிலே களிகூர்ந்து, எங்களுடைய வாழ் க்கை சிறப்பாகவே ஓடிக் கொண்டிருக்கின்றது என்று எண்ணி, ஆரம்பத் தில் கொண்டிருந்த வைராக்கியத்தையும், பிரயாசத்தையும்விட்டு ஓய் ந்து, தற்போது கிடைத்துள்ள ஆசீர்வாதங்களிலும், அவைகளினால் உண் டான சுயாதீனத்திலும் களிகூருகின்றார்கள். சுயாதீனத்தினாலே உண்டா கும் புதிதான நட்புகளும், உறவுகளும், ஒப்பந்தங்களும், வாழ்க்கை முறை யும் இனிமையானவைகளாகவே காணப்படும். இவை யாவும் அவர்கள் இப்போது களிப்போடு விதைக்கும் விதைகள். அதன் பலனை வருங் காலங்களிலே கண்ணீரோடு அறுவடை செய்ய நேரிடலாம். நம்மை அழை த்த ஆண்டவராகிய இயேசு தம்முடையவர்களை மறந்து போகின்ற வர் அல்லர். ஆனால், நாம் ஆதியில் கொண் டிருந்த கிரியைகளை விட்டு ஓயும் போது, புதிய கிரியைகள் நம்முடைய வாழ்க்கையிலே உள்ளிடு வதால், அவைகளை மையமாக வைத்து நாம் எடுக்கும் வாழ்வின் முக்கிய தீர்மானங்கள் பின்பு நம் முடைய வாழ்விலே பெரிதான நோவு களை உண்டு பண்ணிவிடுகின்றது. மறுபடியும் நாம், உணர்வடைந்து ஆதி அன்பிற்கு திரும்பினாலும், நாம் நம்மேல் ஏற்றிக் கொண்ட சில நோவுகள் தவிர்க்கமுடியாததாகவும், எப்போதும் முள்ளுகளைப் போல அவைகள் நம்முடைய வாழ்க்கையிலே நம்மோடு கடந்து வரும். பிரிய மானவர்களே, நிர்விசாரிகளாக மாறிவிடாமல், கண்ணீரின்; பாதையிலும் தேவனுக்கென்று நீங்கள் செய்து வரும் பிரயாசங்களிலிருந்து ஓய்ந்து போய்விடாமல், இன்னும் அதிகமாக செயற்படுங்கள். கெம்பீரத்தோடு அறுவடை செய்யுங்கள்.

ஜெபம்:

என்னை பெலப்படுத்துகின்ற தேவனே, கலப்பையிலே கை வைத்த நான், ஒருபோதும் திரும்பிப் பார்த்து சோர்ந்து போகாமல், உம்மை நோக்கி முன்னேறிச் செல்லும்படி என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 126:5