புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 21, 2022)

காணாமல் போன ஆடுகள்

லூக்கா 15:7

மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்


நான் எத்தனையோ முறை தவறிவிட்டேன். சிறுவர் ஓய்வுநாள் பாட சாலையிலிருந்து பல ஆண்டுகளாக போதனைகளைக் கேட்டு வந்தேன். ஆனால், நான் ஒரு துரோகியாகவே வாழ்ந்து விட்டேன். எத்தனை முறை நான் தேவனிடம் மன்னிப்பை கேட்பது என்று ஒரு இளைஞனா னவன் தன்னுடைய பாட்டனாரிடம் கூறிக் கொண்டான்;. ஆண்டவர் இயேசுவை நேசிக்கும் அந்த பாட்ட னானவர், அந்த இளைஞனான வனை வனை நோக்கி: மகனே, உன்னு டைய மூச்சு உன்னில் இருக்கும் வரை நம்மை அன்பு செய்து அரவ ணைக்கும் ஆண்டவர் இயேசுவிடம் திரும்புவதற்கு தயங்காதே. அவரு டைய அன்பு மனித அறிவுக்கு அப் பாற்பட்டது. ஒரு சமயம், ஆண் டவர் இயேசுவின் பிரதான சீஷனாகிய பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட் டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெ ழுபது தரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று மன்னிப்பதில் தாராள மான மனதுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அவனுக்குச் சொன் னார். பெலவீனமுள்ள மனிதர்களையே அப்படியாக மன்னிக வேண்டும் என்று அவர் கூறுவாராக இருந்தால், இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவரா கிய அவர் எத்தனை முறை நமக்கு மன்னிப்பார் என்று சிந்தித்துப் பார் என்று அந்த இளைஞனாவனுக்கு அவர் அறிவுரை கூறினார். பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய மீட்பராகிய இயேசு மன்னிப்பதில் வள்ளல் என்பதினால் நாம் தாராளமாக பாவம் செய்யலாம் என்பது பொருள் அல்ல. ஆனால், நாம் உயிரோடு இருக்கும்வரைக்கும், இனி ஒருபோ தும் எனக்கு விடுதலையில்லை என்ற எண்ணம் நம்மில் இருக்கக்கூ டாது. அறிந்தோ, அறியாமலோ, சொல்லாலும், செயலா லும், சிந்தனையாலும், கடமைகளை தவறியதாலும் பாவங்கள் செய்து விட்டேன் என்று அறியும் போது, ஆண்டவர் இயேசுவின் சிலுவையின் நிழலிலே அடைக்கலம் புகுங்கள். காணாமல் போன ஆட்டைப் போல, மேய்ப்பனி ல்லாமல் வழிதப்பித் திரியும் ஆடுகளை, மறுபடியும் தன்னுடைய மந்தையில் சேர்த்துக் கொள்ளும்படிக்கே அவர் இந்தப் பூமிக்கு வந்தார். அவருடைய அன்பு வற்றாத நீருற்றைப் போன்றது. எனவே இன்றே ஆண்டவர் இயேசுவிடம் திரும்புங்கள்.

ஜெபம்:

மனதுருக்கமுள்ள தேவனே, என் குறைகளை கண்டு நான் சோர்ந்து போகாமல், உம்மண்டை வந்து சேரும் உணர்வுள்ள இருதயத்தை தந்து, என்னை பெலப்படுத்தி, உம்முடைய வழியிலே என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 15:4-7