புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 19, 2022)

தாழ்விடங்களுக்கு இறங்கினார்

பிலிப்பியர் 2:4

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இரு க்கக்கடவது;


மோக பாவ வலையிலே சிக்குண்டு, கையும் களவுமாக அகப்பட்டு, சட்டதிட்டங்களுக்கமையை, ஊரார் முன்னிலையில் கல்லெறிந்து கொல்ல ப்பட வேண்டியவர்களும், பிறப்பிலிருந்து குருடர்களாக, முடவர்களாக, தெருவோரமாக இருந்து வாழ்வாதாரத்திற்காக, தங்களுக்கு இரங்கு ம்படி மனிதர்களிடம் கையேந்தும் ஏழைகளும், பிசாசின் பிடியிலே அக ப்பட்டு, பிரேதக் கல்லறைகளிலும், மலைகளிலும் சஞ்சரித்து, கல்லுக ளினாலே தங்களையே காயப்படு திப் கொண்டிருக்கும் மனிதர்களை யும் உயிரைக் கொல்லும் தொற்று நோய் பற்றிக் கொண்டதினாலே, ஊருக்குள்ளே பிரவேசிக்க அனுமதிமறுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட மனிதர்களையும், அநியாயத்தினாலே பணம் சம்பாதித்து, துன்மார்க்கத் திலே வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள். அதாவது வழி தெரியாமல் வாழ்விழந்திருந்த இந்த ஏழை எளியவர்களையும், பாவத்திலே பிறந்து, சாபத்திலே வாழும் மனிதர்கள் என்று இவர்களை மதத்தலைவ ர்கள் புறக்கணித்துத் தள்ளினார்கள். தாங்களோவெனில் பரிசுத்தமும், நீதியும் நிறைந்த ஊரின் சிறப்புக் குடிமக்களும், தேவனால் தெரிந்து கொள்ளப் பட்ட ஜனங்கள் என்றும் பாவத்தினாலே சிறைப்படுத்தப்பட்டு, விடுதலை யடைய வழிதெரியாமல் இருந்த பாவிகளையோ இவர்கள் ஒடுக்கினார் கள். இனி வழியில்லை என்று தவித்த இவர்களைத் தேடி நம்முடைய ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். தேவனுடைய ரூப மாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொரு ளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூப மெடுத்து, மனுஷர் சாயலானார். விண்ணுலகின் வேந்தனாகிய பரிசுத்த ராகிய இவர் தாழ்விடங்களுக்கு இறங்கினார். எல்லாவிதத்திலும் நம் மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற ஆண்டவர் இயேசு, நம்முடைய பெலவீனங்களைக் குறித்து பரிதபிக்கின்றார். மகனே, மகளே என்னிடம் வா, நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று மனத்தாழ்மையோடும், சாந்தத்தோடும் அழைக்கின்றார். பிரியமானவர் களே, நாமும், நாளுக்கு நாள் நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் சாயலிலே வளரவேண்டும். வேறுபிரிக்கப்பட்டவர்கள், பரிசுத்தவான்கள், நீதிமான் கள், ராஜரீகமான ஆசாரியக்கூட்டம் என்று மனதிலே நாம் பெருமையடைந்து, நம்மையே நாமே உயர்த்தாதபடிக்கு, நம்முடைய கர்த்தரைப் போல தாழ்விடங்களிலே இருளிலே வாழும் ஜனங்களைக் குறித்து சிந்தையு ள்ளவர்களாக இருப்போமாக.

ஜெபம்:

தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கை யையும் எங்களில் உண்டாக்குகிற தேவனே, சிறுமைப்பட்டவர்கள் மேல் சிந்தையுள்ளவனாக நான் இருக்க உணர்வுள்ள இருதயத்தைத் தந்தரு ள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 4:18