தியானம் (ஐப்பசி 18, 2022)
நம்முடைய பார்வை எப்படி இருக்கின்றது?
லூக்கா 15:32
நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.
நாம் வேறுபிரிக்கப்பட்ட சந்ததியாக, கிறிஸ்துவுக்கென்று நம்மை அர்ப்பணித்து, இந்த உலகின் ஆசை இச்சைகளை விட்டுவிட்டு, பல தியாக ங்களை செய்து, நீதியின் பாதையிலே நடக்கும்படியாக பல ஆண்டுக ளாக அதிகமாக பிரயாசப்படுகின்றோம். அப்படியான வேளையிலே, அநீ தியான வாழ்க்கை வாழ்ந்து, பாவத்திலே உல்லாசமாக வாழ்ந்து, நாட் களை ஆசை தமது இச்சைகளின்படி உல்லாசமாக கழித்து, திக்கற்றிரு க்கும் சகோதரர்களைக் காணும் போது, விசனமாக இருக்கின்றதா? அவர்களை எப்படிப்பட்ட உள்ளத் தோடு பார்க்கின்றோம்? ஒரு மனித னானவனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் மூத்த வன் தன் தகப்பனானவனை கனம் பண் ணுகின்றவனும், கீழ்படிகின்றவனும், தகப்பனுடைய வயிலிலே செய்யப் பட வேண்டிய வேலைகளை கருத்துடன் செய்து வருகின்றவனாகவும் இருந் தான். ஆனால் இளையவனோ, தகப்பனுடைய சொத்துக்களிலே தனக்கு சேர வேண்டிய பங்கை எடுத்துக் கொண்டு, சீர்கேடும் பாவமுமான வழிகளிலே வாழ்ந்து அதை முற்றாக அழித்துப்போட்டான். இந்த சம்பவத்தை நாம் தியானித்து பார்க்கும் போது, உண்மையிலே மூத்தவன் ஞானமுள்ளவனும், பரிசுத்தமுள்ள வாழ்க்கையின் வழியை தெரிந்து கொண்ட நல்ல குமாரானாக இருந்தான் என்பதை காண்கின்றோம். ஆனால், இளையவனோ, அசுத்தமான வாழ்க்கையின் வழிகளை தெரி ந்து கொண்ட கெட்ட குமாரனாக இருக்கின்றான். நிர்க்கதியான நிலைமையிலே அவன் தன் தகப்பனுடைய வீட்டிற்கு திரும்பி வந்தான். தகப்ப னானவரோ, தன் இரக்கத்தை அவனுக்கு காண்பித்து, அவனை மறுப டியும் அரவணைத்து சேர்த்துக் கொண்டார். ஆனால் இந்த சம்பவமா னது மூத்தவனுக்கு விசனமாக இருந்தது. மூத்தவன் கீழ்படிவும், பரிசுத் தமுமுள்ள வழியை தெரிந்து கொண்டு, அதில் வாழ்ந்து உண்மையான கூற்று. ஆனாலும், அந்த மூத்த மகனானவனோ, மனந்திரும்பும் பாவிகளை பார்க்கும்விதத்திலே இன்னும் வளர வேண்டியவானாகவே இரு ந்தான். ஒரு நல்ல தகப்பனானவன் தன் பிள்ளைகளை எப்படிப் பார்க்கின்றார் என்பதை குறித்து மூத்தவன் அறிந்து கொள்வதற்கு காலம் தேவையாக இருக்கின்றது. பாவிகள் மனந்திரும்ப வேண்டும், அவர்களை நான் சிலுவையண்டைக்கு நடத்த வேண்டும், அவர்கள் பல அநியாயங்களை செய்திருந்தாலும், அநியாயத்திலே அழிந்து போகாமல், மனந்திரும்பி பர லோகத்திற்கு செல்ல வேண்டும் என்னும் வாஞ்சை நம்மிடத்திலும் பெருக வேண்டும்.
ஜெபம்:
அன்புள்ள பிதாவே, ஒரு தகப்பனானவர் தான் நேசிக்கும் மகனை மன்னிப்பதுபோல, நானும் மற்றவர்களை மன்னித்து அரவணைக்கும் உள்ளம் உள்ளவனாக வளரும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - லூக்கா 15:11-32