புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 17, 2022)

சுமப்பதற்கரிய பாரமான சுமைகள்

மத்தேயு 23:4

சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்;


தன் அயலிலே வாழ்ந்து வந்த மனிதனொருவன் தனது சிறு பையனை தண்டிக்கும் முறையை ஒரு பாட்டனார் அவதானித்து வந்தார். இவ் விதமாக ஒரு நாள், அந்த மனிதனானவன், தன் பிள்ளையாண்டானை தண்டிக்கும் போது, அந்த பாட்டனார் அந்த மனிதனானவனை நோக்கி: ஏன் அந்த சிறு குழந்தையை இப்படியாக தண்டிக்கின்றாய்? அவன் காரியமறியாத மழலையாக இருக்கி ன்றானே என்று கேட்டார். அதற்கு அவ ருடைய மகனானவன் மறுமொழியாக, ஒரு தகப்பன் தான் நேசிக்கிற புத்திர னைச் சிட்சிக்கிறதுபோல, நானும் என் னுடைய மகனை சிட்சிக்கின்றேன் அதிலே என்ன தவறு என்று கூறி னான். அதற்கு அந்த பாட்டனானவர்: மகனே, அந்த சிறு பிள்ளையானவன், உன்னுடைய மகன் என்பது எனக்கு தெரியும், பிள்ளைகள் சிட்சிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் நான் அறிந்திருக்கின்றேன். ஆனால் அந்த சிறு பிள்ளையானவன், திட னற்றுப்போகாதபடி பார்த்துக் கொள் என்றார். 'என் மகனே, நீ கர்த்தரு டைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும் போது சோர்ந்துபோகாதே' என்ற வசனத்தை அறிகின்ற அறிவுகூட அந்த சிறுபிள்ளையாண்டனுக்கு இல்லை. முதலாவதாக, நம்முடைய பரம தந்தை நம்மை நேசிக்கின்றார். அதை நமக்கு வெளிப்படுத்துகி ன்றார். பெலவீனமான இடங்களிலே ஒரு தந்தையைப் போல தூக்கிச் சுமக்கின்றார். குற்றம் செய்து முடங்கிப் போயிருக்கும் போது தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல அவர் இரக்கத்தை காண்பிக்கி ன்றார். நீ சுமக்கும் கடினமாக பாரங்களை உன் மழலைச் செல்வங்கள் மேலே ஏற்றாதே என்று அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, இந்த சம்பவத்தை மையமாக வைத்து, இன்றைய நாளிலே, சரீரத்தின்படி நம்முடைய பிள்ளைகளை மாத்திரமல்ல, ஆவிக்குரிய ரீதியிலும், கிறிஸ் துவுக்குள் சிறு பிள்ளைகளைப் போல வளர்ந்து வரும் விசுவாசிகளைக் குறித்தும் நாம் கருத்துள்ளவர்களாக இருக்க வேண்டும். அதனால், அவர்கள் செய்வதெல்லாம் சரி என்று பாரமுகமாக இருக்க வேண்டும் என்பது பொருளல்ல. ஆனால் சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் நாம் ஏற்றக் கூடாது. தேவனை அறிகின்ற அறிவிலே ஒருவ்வொருவரும் வளர்ந்து பெருகும்படிக்கு நாம் பொறுமையுள்ளவர்களாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

ஒரு தகப்பனானவனைப் போல நேசிக்கும் தேவனே, சிறு பிள்ளைகளைப் போல கிறிஸ்துவுக்குள் வளர்ந்து வரும் மனிதர்கள்மேல் பொறுமையாக இருக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 16:5