தியானம் (ஐப்பசி 16, 2022)
அருவருக்காமல் அணைத்துக் கொண்டவர்
1 தெச 5:14
ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
தேசமொன்றிலுள்ள பின்தங்கிய கிராமமொன்றிற்கு மருத்துவ சேவைக் காக ஒரு வைத்தியரானவர், தன்னை அர்பணித்தவராய், அந்த கிராமத் திற்கு சென்று குடியேறினார். அங்குள்ள ஜனங்களில் ஏறத்தாழ யாவ ரும் சுகாதாரத்தைப் பற்றி எந்த கரிசனையற்றவர்களாவும், தாங்கள் வசி க்கும் இடத்தையும் சுற்றாடலையும் தூய்மையாக பேணிக் காப்பதில் எந்த நாட்டமுமில்லாதிருப்பதை அவர் கண்டு கொண்டார். வைத்தி யரானவரோ, சுகாதராத்திலும், தன் உடல்நலம் பேணும் விவகாரங்களி லும் மேம்பாடுள்ளவராக இருந்த போதிலும், அந்த ஜனங்களை கண்டு மனதுருகினார். எனினும், தன்னுடைய சுகாதாரத்தையும், தூய்மையையும் பேணிப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாகவே இரு ந்து வந்தார். அதே வேளையிலே, அந்தக் கிராமத்திலுள்ள மனிதர்கள் மேல் தானிருக்கும் மேலான நிலைமையை திணிக்காமல், அவர்களின் சுத்தமற்ற வாழ்க்கை முறையைக் கண்டு அவர்களை அருவருக்காமல், அவர்களும் தன்னைப் போல மாற வேண்டும் என்ற எண்ணமுடையவ ராய், அவர்களுக்கு படிப்படியாக சுகாதாரத்தையும் அதன் வழிமுறை களையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். பிரியமானவர்களே, நம்மு டைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவும் அந்த வைத்தியரைப் போலவே, தம்முடைய பரித்தத்தை நம்மேல் திணிக்காமல், நம்முடைய நிலைiயை நன்றாக அறிந்து, யாரும் காணமுடியாத எம் உள் அலங் கோலங்கள் கண்டு எங்களை அருவருக்காமல், நாம் தம்முடைய சாயலை அணிய வேண்டும் என்று நம்மேல் நீடிய பெறுமையுள்ளவராக இருந்து, கரம்;பிடித்து நடத்திச் செல்கின்றார்;. நான் இன்று இப்போது, இந்த கண த்திலே முழுமையாக ஆண்டவராகிய இயேசுவைப் போல மாற வேண் டும் என்று அவர் எதிர்பார்த்தால் நம்முடைய நிலைமையானது என்னா வது? அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாம லும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டா மலும் இருக்கிறார். (சங்கீதம் 103:10). எனவே நம்முடைய பரிசுத்தத்தை நாம் மற்றவர்களிடம் திணிக்காமலும், நாம் உலகத்தால் கறைபடாதபடி க்குத் நம்மைக் காத்துக்கொண்டு, மற்றவர்களும் நம்மை நாம்போல கிறி ஸ்துவுக்குள் வளர்ந்து தேரச்சியடையும்படி, அவர்களுக்காக பரிந்து பேசி, வேண்டுதல் செய்து, அவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்.
ஜெபம்:
ஜெபம்: அன்பின் பரம தந்தையே, இந்த உலத்திலே வாழும் நான், உலகத்தினால் கறைபடாமல் என்னை காத்துக் கொண்டு, மற்றவர்களை உம்மண்டை நடத்துகின்றவனாய் வாழ நீர் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யாக்கோபு 1:27