புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 15, 2022)

மாம்ச எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி

மத்தேயு 6:14

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார்.


போதகர் ஐயா அவர்களே, இந்த முறையோடு, அந்த மனிதனானவன் ஐந்தாவது தடவையாக எனக்கு விரோதமாக அநியாயம் செய்திரு க்கின்றான். இவனை எப்படி மன்னிப்பது? எவ்வளவு காலத்திற்கு நான் பொறுமையாக இருப்பது, எல்லாவற்றிகும் ஒரு எல்லை உண்டு. இதற் கும் ஒரு முடிவு வேண்டும் என்று ஒரு விசுவாசியானவன் முறையிட் டான். அதற்கு அந்த அனுபவமிக்க வயதான போதகரானவர், அவனை நோக்கி: மகனே, நீ எத்தனை முறை உன் தேவனாகிய கர்த்தரிடத்திலே மன்னிப்பை வேண்டி அவருடைய சமுகத்திற்கு செல்லும் படியாக திட் டமிட்டிருக்கின்றாய்? எவ்வளவு காலம் உன்னைப் படைத்தவர் உன் மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருக்க வேண்டும் என்று நீ எதிர்பார்க்கின்றாய்? அதன்படிக்கு நீயும் உன் சக விசுவாசிக்கு மன்னிப்பை வழங்கி, அவன்மேல் பொறுமையாய் இரு. நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவின, ஆண்டவராகிய இயேசு நம்மேல் நீடிய பொறுமையாக இருக்காவிட்டால் நம்முடைய நிலைமை எப்படியாகும் என்று நீ எப்போதாவது சிந்தித்த துண்டா? பாடசாலையிலே எத்தனை முறை உன் ஆசிரியர் உன்னை கண்டித்தாலும், பொறுமையாக இருந்து படித்தாய், ஏன் இந்த உலக கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் உன்னிடத்தில் இருந்தது. வேலையிலே உன்னுடைய அதிகாரி உன்னை கடினமாக நடத்தின நாட்கள் அதிகம், அவைகளை சகித்துக் கொண்டாய்? ஏன் பணமும் பதவியும் உனக்குத் தேவை. குhரி யம் அப்படியானால், ஈடு இணையில்லாத நித்திய வாழ்விற்காக உன் சகோதரன் மேல் பொறுமையாக இருக்க உன்னால் ஏன் முடி யாமல் இருக்கின்றது? சற்று சிந்த்தித்துப் பார் மகனே என்றார். ஆம் பிரியமா னவர்களே, தேவனாகிய கர்த்தர் நம்முடைய வாழ்விற்கு முற்றுப்புள்ள வைத்தால் நாம் யாவரும் நிர்மூலமாகியிருப்போம். சில வேளைகளிலே மன்னிப்பு வழங்குவது மனிதனுடைய பெலனுக்கு அப்பாற்பட்டது. ஆறாத மனப்புண்களும், தேற்றப்படாத மனவேதனைகளும் மனிதனை பெலவீனப் படுத்தலாம். ஆனால், மனப்புண்களில் எண்ணெய் தடவி, மன ஆறுதல் தரும் ஆண்டவர் இயேசு நம்மோடு இருக்கின்றார். நம்மு டைய மனித பெலனத்தினால் ஆகாததை செய்து முடிக்க நமக்குள் இருக்கின்ற ஆவியானவர் தாமே நம்மை பெலப்படுத்து கின்றார்.

ஜெபம்:

என்மேல் நீடிய பொறுமையாய் இருக்கும் தேவனே, எனக்கு உறுதியூட்டும் இயேசு கிறிஸ்துவால் மாம்சத்தின் சிந்தையை ஜெயங்கொள்ள முடியும் என்ற மனப் பிரகாசமுள்ள கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:13