புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 14, 2022)

எப்படி முகம்கொடுப்பேன்?

சங்கீதம் 103:13

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர் த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.


ஒரு ஊரிலே எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்த மனிதனானவன், நாட் டிலே ஏற்பட்டிருந்த பொருளாதார வீழ்ச்சியினால், வெகுவாய் பாதிக்க ப்பட்டான். வறுமை அவனையும் அவன் குடும்பத்தையும் வாட்டியது. அவன் வாழ்ந்து வந்த தெருவின் மேற்பகுதியிலே, ஒரு செல்வந்தன் இருந்தார். அவர் ஏழைகளுக்கு இரங்கி கடன் கொடுக்கின்ற வள்ளலாக வாழ்ந்து வந்தார். அந்த செல்வந்தனிடம், இந்த ஏழையானவன் அதிகமாக கடன்பட்டான். அதை அவன் திருப்பி செலுத்த முடியாததால், அவனுடைய முகத்திலே எப் படி முழிப்பேன் என்று அந்த செல் வந்தனின் வீட்டுப் பக்கமாக செல் லாமல், மறுபக்கமாக தெருவின் கீழ்புறாமாக சென்று, நீண்ட வழியினூ டாக நெடுஞ்சாலைக்கு சென்று வந்தான். இப்போது, தன் குடும்பக் கஷ;டம் இன்னும் அதிகமாக இருந் ததால், இனி என்ன செய்வேன் என்று மனவேதனையடைந்தான். ஒரு நாள், அவன் நீண்டவழியூடாக நெடுஞ்சாலைக்கு செல்லும் போது, எதிர் பாராத விதமாக அந்த செல்வந்தனான கொடை வள்ளல் இந்த ஏழையானவனுக்கு எதிர்ப்பட்டார். அவரை கண்டதும், நடுக்கத்துடன், அவர் பாத த்திலே விழுந்து, ஐயா, உங்களுடைய கடனை கொடுக்க எனக்கு வழி யில்லை. குடும்பத்திலே கஷ;டம் அதிகமாக இருக்கின்றது என்று தன் நிலைமை எடுத்துக் கூறினான். அதை கேட்ட, அந்த செல்வந்தன், சிரித்த முகத்துடன், அந்த ஏழையானவன் கையை பிடித்து தூக்கி, அவனை தேற்றி, கலக்கமடையாதே. நாட்டின் நிலைமையை நான் நன்கு அறிந் திருக்கின்றேன். உன்னுடைய நிலைமையும் நான் அறிந்திருக்கின்றேன். உன் பிள்ளைகளை நீ பட்டினியாக விடுடாதே என்று அவனுக்கு பணம் கொடுத்து, நான் உனக்கு கொடுத்த கடனைப் பற்றி கவலையடை யாதே என்று வழியனுப்பினார். பிரியமானவர்களே, இப்படிப்பட்ட பெரும் நெஞ்சம் படைத்த மனிதர்கள் பூமியிலே இருக்கின்றார்கள். மனி தர்களுக்குள்ளே அப்படிப்பட்ட இரக்கம் இருக்குமாயின், தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்காக கொடுத்த, நம்முடைய பரம தந்தை யாகிய தேவனாகிய கர்த்தர் தம்மை நோக்கி பார்க்கின்றவர்களுக்கு இரங்காதிருப்பாரோ? செய்த குற்றம் எத்தனையோ என்று சோர்ந்து போகாதிருங்கள். எப்படி தேவ சமுகத்திற்கு செல்வேன் என்று சலிப்ப டைந்து பரம தந்தையைவிட்டு வேறு வழியாய் செல்லாதிரு ங்கள். நித்திய ஜீவனுக்கு வேறு வழி இல்லை. மனதுருக்கமுள்ள தேவன் உங்களை தேற்றி, பெலப்படுத்தி, உறுதிப்படுத்துவார்.

ஜெபம்:

உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையு முள்ள பரம தந்தையே, என் பெலவீன நேரங்களிலே நான் உம்மைவிட் டு தூரம் போய்விடாதபடிக்கு என்னை காத்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:26