புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 12, 2022)

யாரை திருப்திபடுத்துகின்றோம்?

எபிரெயர் 2:4

இவ்வளவு பெரிதான இரட் சிப்பைக்குறித்து நாம் கவ லையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பி த்துக்கொள்ளுவோம்.


ஒரு சபை ஐக்கியத்திற்கு செல்லும் வாலிபனானவன், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறியாத பெண்ணொருத்தியை விவாகம் பண் ணும்படி விருப்பம் கொண்டதினால், தன் பெற்றோரின் சம்மதத்;தை பெற்றுக் கொள்ளும்படிக்கு, அவளை ஞானஸ்நானத்திற்கு ஒப்புக் கொடுக்கு ம்படியாக வேண்டிக் கொண்டான். அவளும், அந்த வாலிபன் மேல் கொண்ட விருப்பத்தினால், உனக்காக நான் எதையும் செய்வேன் என்று, இவைகள் திருமணத்திற் காக முன் செய்யபடும் சடங்குகள் என்று எண்ணி, சபைக்கு செல்லவும் ஞானஸ்நானம் எடுக்கவும் சம்மதம் செய்து கொண்டாள். ஆனால் அவளோ இரட்சிப்பு என்றால் என்ன? ஞானஸ்நானம் ஏன் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி எதையும் அறிந்திருக்கவி ல்லை. எப்படியாவது அந்த வாலிபனானவனின் பெற்றோரின் சம்மதத்தை பெற்றுக் கொண்டால் போதும் என்பதே அவர்களுடைய நோக்கமாக இருந்தது. பிரியமா னவர்களே, இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த வாலிபனானவன் நித்திய ஜீவனுக்கென்று மேலான பரம அழைப்பின் பந்த யப் பொருளுக்காக, பிரதானமான இலக்கை நோக்கி ஜீவ யாத்தி ரையை மேற்கொள்ளுகின்றேன் என்றும், எப்படியாவது நான் அதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை அற்றவனாகவும், தான் பரிசுத்த சந்ததியை இந்தப் பூமியிலே ஏற்படுத்தும்படி அழைக்கப்பட் டேன் என்பதையும் குறித்த உணர்வற்றவனாகவும், தன் வருங்கால மனைவி ஆண்டவர் இயேசுவோடு இணைக்கப்பட்டிருக்கின்றாளா என்ப தைக் கூட அறியாதவனாய், அதை அற்பமாக எண்ணி, தன்னை அவள் ஏற்றுக் கொண்டு தான் சொல்வதை செய்தால் மட்டும் போதுமென்ற மன நிலையுடையவனாக இருந்தான். தன்னுடைய ஜீவ யாத்திரை எப்படி யாக முடியும் என்பது அவனுக்கு தற்போது ஒரு பொருட்டல்ல, மாறாக தன் பெற்றோரினது அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டு, தன் ஆசையை நிறைவேற்றினால் போதும் என்பதே அவனுடைய பிரதானமான பந்தை யப் பொருளாக மாறிவிட்டது. பிரியமானவர்களே, தம்முடைய சித்தத் தின்படி பகிர்ந்து கொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அற்பமாக எண்ணாதிருங்கள். தேவசித்தம் உங்கள் வாழ்வில் நிறை வேற இடங் கொடுங்கள்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, நீர் எனக்கு கொடுத்திருக்கும் இந்த மேன்மையான அழைப்பை நான் உம்முடைய சித்தத்தின்படி நிறைவே ற்றி முடிக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:8-9