தியானம் (ஐப்பசி 11, 2022)
அதிமேன்மையான அழைப்பு
பிலிப்பியர் 3:14
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
சபையிலே உதவி ஊழியங்களை சீராக செய்து வந்த வாலிபனானவ னொருவன் இருந்தான். அவன் தன்னுடைய சின்ன வயதிலிருந்து தன் ஊரிலே நடைபெற்றுவரும் வருடாந்த சைக்கிள் ஓட்டப் பந்தைய போட் டியிலே வெற்றி பெற்று, பரிசுப் பொருளாக இருக்கும் வெற்றிக் கிண்ண த்தை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் வாஞ்சையாக இருந்து வந்தான். அதற்குரிய பயிற்சிகளை செய்து வந்த அந்த வாலி பனானவன், தன்னுடைய மேலா னதும் இறுதியானதுமான பரம அழைப்பின் பந்தையப் பொரு ளின் மேல் மிகவும் உறுதியு ள்ளவனாக இருந்தான். தனக்கு கிடைத்த அருமையானதும், மேன்மையானதுமான அழை ப்பை ஒரு பொக்கிஷத்தைப் போல காத்து, ஊழியத்தில் உதவியாயிருப்பது தனக்கு கிடைத்த சிலா க்கியம் என்று எண்ணி, தன் பொறுப்புக்களை தவறவிடாமல், மனதார செய்து வந்தான். இந்த உலகிலே தான் வாழும்போது சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது, அவனைப் பொறுத்தமட் டில் இரண்டாவதகாவே இருந்தது. ஆண்டுகள் கடந்து சென்றதும், ஒரு நாள் அவன் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டான். சில மாதங்களுக்கு பின்பு, அவன் தேசமட்டத்தில் நடைபெறும் போட்டிகளிலுல் கலந்து கொள்ளும்படியான அழைப்பை பெற்று கொண்டான். ஆனால், தன் நிலைமையையும், தன் பொறுப்புக்களையும், தனக்கு கிடைத்த ஊழியங்களை தான் விட்டுவிட வேண்டிய நிலை உண்டாகும் என்று அறிந்து, தனக்கு கிடைக்கவிரு க்கும் ஜீவ கிரீடத்தை இந்த உலகத்திலுள்ள எந்த காரியத்திற்காகவும் தான் நான் இழக்க தயார் இல்லை என்று கூறி, அவனுக்கு கிடைத்த தேசியமட்ட அழைப்பை விட்டுவிட்டான். பிரியமானவர்களே, இந்த உல கிலே நன்மையாக தோன்றும் பல காரியங்கள் உண்டு. இன்று பல தேவ பிள்ளைகள், படிக்கின்றார்கள், உழைக்கின்றார்கள், வியாபாரங்களை விஸ் தரிக்கின்றார்கள், ஊரைவிட்டு இடம் பெயர்கின்றார்கள், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கின்றார்கள். இவையெல்லாம் நாம் பெற்றிரு க்கும் மேலான அழைப்பாகிய நித்திய ஜீவனுக்கு நிகரானவைகள் அல்ல என்பதை திட்டமான உங்கள் இருதயத்திலே பதியவையுங்கள். நாம் செய்யும் செயல்கள் எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக செய்யப்பட வேண்டும். உங்கள் நிலைமையை ஆராய்ந்து பார்த்து எப்போதும் தேவன் தரும் அதிமேன்மையானதை பொக்கிஷமாக காத்துக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
அதிமேன்மையானதை எனக்கு தந்த தேவனே, நான் ஒருக்காலும் இடறிவிழாதபடிக்கு என் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாய் பற்றிக் கொண்டிருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 பேதுரு 1:10