புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 10, 2022)

யார் எங்கள் தேவைகளை சந்திப்பார்கள்?

மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப் பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடு க்கப்படும்.


யார் வீட்டிலே பிள்ளைகளுக்கு சாப்பாடு போடுவார்கள்? யார் வீட்டின் வாடகை பணத்தை செலுத்துவார்கள்? யார் எங்களுடைய நாளாந்த செலவுக்கான பணத்தை தருவார்கள்? என்று தங்கள் வாழ்வின் அத்தியாவசியமான தேவைகளை சுட்டிக்காட்டியபடியே ஞாயிறு ஆராதனை களையும், சபை கூடிவருதலையும் சிலர் விட்டுவிடுகின்றார்கள். இதனால், இவர்கள். தங்கள் நிலைமையை சபையின் போதகர், மற்றும் விசுவாசகள் மத்தியில் நியாயப் படு த்தலாம் என எண்ணுகின்றார்கள். பிரியமான சகோதரசகோதரிகளே, நாம் சபை கூடிவருவது சபையின் போதகரையும், விசுவா சிகளையும் திருப்திபடு த் துவதற்காக அல்ல. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்ப டியாக தேவனானவர் சபையை ஈவாக கொடுத்திருக்கின்றார். இந்த உலகிலே தெரிவுகள் பல உண்டு. எதை தெரிந்து கொள்ளப் போகின்றேன் என்பது அவனவனுடைய சுயதீர்மானம்;. சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள் என்று பரிசுத்த வேதாகமம் அறிவுரை கூறுகின்றது (1 பேதுரு 2:16). விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்று நமது தேவன்; கூறுகின்றார். (எபி 10:38). மனிதர்கள் தங்கள் வாழ்வில் எடுக்கும் தீர்மானம் அவர்கள் இரு தயம் நம்பியிருப்பதை பிரதிபலிக்கின்றது. யார் எங்களுடைய தேவைகளை சந்திப்பார்கள்? கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவ ர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. (சங் 34:9-10) ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப் போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். தேவனை தொழுது கொள்ளும் மனவாஞ்சையுடையவனுக்கு, அவனுடைய வாஞ்சையின்படி தேவன் அவனவனுக்குரிய வழியை ஆயத்தப்படுத்துகின்றார். எனவே உங்கள் வாழ்விலே நல்ல தீர்மானங்களை எடுத்துங் கொள்ளுங்கள்.

ஜெபம்:

என்னைப் பெலப்படுத்தும் தேவனே, இந்த உலகிலே நான் எதிர்நோக்கும் சவால்களை ஜெயம் கொள்ளும்படிக்கு நல்ல தீர்மானங்களிலே நான் நிலைநிற்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங் 23:1-6