புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 09, 2022)

பரிசுத்தம் காத்துக் கொள்வோம்

1 தெச 4:7

தேவன் நம்மை அசுத்தத் திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.


ஐயா, போதகர் அவர்களே, நான் எதிர்பார்த்தபடி நல்ல சம்பளத்துடனும், பதவி உயர்வுடனும் எனக்கு ஒரு வேலை கிடைத்திருக்கின்றது. வேலை செய்யும் இடம் கொஞ்சம் பிரச்சனையுள்ளதுதான். இப்போது வேலைகள் எடுப்பது மிகவும் கடினம். அப்படி பார்க்கப் போனால், இந்த முழு உலகமுமே கோணலும் மாறுபாடும் நிறைந்தாகவே இருக்கி ன்றது. நான் பழைய இடத்தில் எப்படி பரிசுத்தத்தை காத்துக் கொண் டேனோ அப்படியே இந்த இடத்தி லும் காத்துக் கொள்வேன் என்று இளைஞனொருவன் தன் போதக ரானவரிடம் கூறினார். அவன் பேச்சு சற்று விலகியிரு ப்பதை அவதா னித்த போதகர் அவனை நோக்கி: மகனே, எங்கே அந்த வேலையை பெற்றிருக்கின்றாய் என்று கேட்டார். பட்டணத்தின் மையப் பகுதியிலிரு க்கும் பொழுது போக்கு நிலையத்தில் (Entertainment Centre) அந்த வேலையை பெற்றிருக்கின்றேன் என்றான். அதற்கு போதகரானவர்: மகனே, இது உன் வாழ்க்கை, வாழ்க்கையிலே அநேக தெரிவுகள் உண்டு. தீர்மானமோ உன்னுடையது. ஆனால் நீ நித்திய ஜீவனுக் கென்று அருமையான அழைப்பை பெற்றிருக்கின்றாய். நீ வேலை பார்க்க இருக்கும் இடத்திற்கு சிறுவர்கள் செல்ல முடியாது. அங்கே, களி யாட்டமும், பந்தயம் கட்டுதலும், சூதாட்டமும் உண்டு. மனிதர்கள் அங்கே அதற்காகத்தான் செல்கின்றார்கள். அவர்களுக்கு நீ என்ன நற்செய் தியை கூறவாய்? இங்கே வராதீர்கள், இவ்விடத்திலே பாவமும், பாவத்தை தூண்டும் காரியங்களும் தாராளமாக உண்டு என்று கூறுவாயா? பாவம் நிறைந்த இடங்களுக்கு உன் இருதயம் பழக்கப்படு முன், உன்னுடைய சுத்த மனசாட்சி உனக்கு என்ன சொல்கின்றது என்று சீர்தூக் கிப்பார். பாவ காரியங்களை பார்த்து பழகிக்போன பின்பு, மனச்சாட் சியில் சூடுண்டவனாக மாறிவிடுவாய். இந்த உலகம் முழுவதும் பொல்; கனுக்குள் கிடக்கின்றது என்பது உண்மை. ஆனால் நாமோ தேவனால் உண்டாயிருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான். எனவே, உன் தீர்மானங்களை குறித்து எச்சரிக்கையாயிரு. விலகி ஓட வேண்டிய இடத்தை, நீ நாடித் தேடாதே. அநேகரை பாவத்திற்கு விழு த்தி, அவர்கள் வாழ்க்கையை அழித்துப் போடும் காரியங்களுக்கு நீ ஒத்தாசையாக இருக்காதே என்று அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, இந்த உலகத்திலே நமக்கு சவால்கள் உண்டு, அதனோடு இன்னும் பார ங்களை உங்கள் மேல் ஏற்றி, இளைத்து பின் வாங்கிப் விசுவாசத்தை விட்டு விலகிப் போகாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவராகயிருங்கள்.

ஜெபம்:

பரிசுத்தத்திற்கென்று என்னை வேறு பிரித்த தேவனேஇ பரிசுத்த மாகுதலை தேவ பயத்தோடு காத்துக் கொள்ளும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண் களை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 4:23