தியானம் (ஐப்பசி 08, 2022)
ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம்
2 கொரிந்தியர் 6:16
நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன்,
சிறுவர்கள் பாடங்களை கற்கும்படிக்கு பாடசாலைக்கு சென்று பல மணி நேரங்களை, வெவ்வேறு ஆசிரியர்களோடும், பலதரப்பட்ட மாணவர்க ளோடும் செலவிடுகின்றார்கள். பெரியவர்கள், பிழைப்புக்காக வேலை செய்யும்படிக்கு பல இடங்களுக்கு சென்று, பலவிதமான மனிதர்களை அங்கே சந்திக்கின்றார்கள், அவர்கள் மத்தியிலே பல மணி நேரங்களை செலவிடுகின்றார்கள். சிறியவர்கள் பெரியவர்கள் யாவரும் வெளியிடங்களிலும், கடைத் தெருக் களிலும் நேரங்களை செலவிடுகின்றார்கள். இவ்விதமாக நாம் யாவரும் பலவிதமான நம்பிக்கையுடை யவர்களையும், சன்மார்க்க வழியிலும், துன்மார்க்க வழியிலும் வாழும் மனிதர்களை நாளாந்த வாழ்க்கையிலே சந்திக்க நேரிடுகின்றது. அத னால், நாம் பிதாவாகிய தேவனை விட்டு தூரம் சென்று விடுகின்றோம் என்பது பொருளல்ல. உலகிலுள்ளவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்றால், நாம் உல கத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே. (1 கொரி 5:10). எனினும், நமக்கு தகுதியில்லாத இடங்களை நாம் தவிர்த்துக் கொள்வது நல்லது. இந்த உலகிலுள்ள எந்த ஒரு காரியமும் நாம் நம்பியிருக்கிற நித்திய ஜீவனுக்கு நிகரானதல்ல. நாம் செல்லும் இடங்கிலே இந்த உலக போக்கை பின்பற்றும் மனிதர்கள் அநேகரை சந்திக்க நேரிடு கின்றது. அவர்களின் நடை, உடை, பாவனை, பேச்சு, எண்ணம், நோக் கம் யாவும் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷமாக இருக்கின்றது. நாம் அந்த வேஷமானது நம்மை கவர்ந்து கொள்ளும் போது, நாம் நம்மு டைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடுள்ள ஐக்கியத்தை விட்டு விலகி, இந்த உலக போக்கோடு தொடர்புகளை ஏற்படுத்தி விடுகின் றோம். நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவா சியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக் கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நாம் ஆண்டவர் இயேசுவின் மாதிரியை இந்த உலகத்திற்கு காண்பிக்கின்றவர்களும், அவருடைய மீட்பின் நற் செய்தியை உலகத்திற்கு அறிவிக்கின்றவர்களுமாக இருக்கின்றோம். எனவே இந்த உலகத்தில் செம்மையாக தோன்றும் வழிகளை, நம க்குள்ளும், நம் வீட்டிற்குள்ளும், சபைக்குள்ளும் கொண்டு வரக் கூடாது. நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
ஜெபம்:
ஜீவள்ள தேவனே, நான் ஓடியது வீணாக போகாதபடிக்கு, கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளையாகவும் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:15