புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 07, 2022)

கண்ணிகளில் சிக்காதபடிக்கு...

யோவான் 10:4

ஆடுகள் அவன் (மேய்ப்பனின்) சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.


ஒரு பூங்காவிலே தன் பந்தை எறிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறு பையனானவன், தான் எறிந்த பந்தை எடுப்பதற்காக தன் தகப்ப னானவரிருந்த இடத்திலிருந்து சற்றுத் தூரம் சென்றுவிட்டான். பந்தை கையிலெடுத்ததும், சுற்றிப் பார்த்த அந்த சிறு பையனானவன், முகம றியாத சில அந்நியர்கள் அங்கே இருப்பதை கண்டான். தன் தகப்ப னானவன் தன் அருகிலே இல்லாதிருப்பதை அவன் உணர்ந்த போது, கலகத்துடன், வேகமாக ஒடிச் சென்று தன் தகப்பன் மடியிலே ஏறிக் கொண் டான். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பார்ப்போமென்றால், பூங் காவிற்கு சென்று அந்த சிறு பைய னானவன் பந்தெறிந்து ஓடி விளை யாடுவதில் தவறு ஒன்றுமில்லை. அது போலவே நாமும் கூட நம்மு டைய வாழ்க்கையிலே குற்றமேது மில்லாதது என்று கூறும் பல காரியங்களை செய்து வருகின்றோம். அவற்றில் சில அத்தியவசியமானவைகளும், சில நம்முடைய பொழுது போக்குகளு மாக இருக்கலாம். நம்முடைய நோக்கங்கள் சீராக இருந் தாலும், நாம் கோணலும் மாறுபாடுமான சந்ததி நடுவே வாழ்கின்றோம் என்பதையும், நம்மை கண்ணியிலே சிக்கவைக்கக்கூடிய சந்தர்ப்பங் களை எதிராளியானவனாகிய பிசாசானவன் பார்த்துக் கொண்டே இருக் கின்றான் என்பதையும் மறந்து விடக்கூடாது. ஆடுகள் ஓநாய்களுள்ள இடத்திற்குள் செல்வதைப் போன்ற சந்தர்ப்பங்கள் நம்மை அறியாமலே நமக்கு ஏற்படலாம். எனவே, நாம் சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவ ர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருக்க வேண்டும். நம்மை சுற்றி தேவன் வைத்திருக்கும் தம்முடைய பாதுகாப்பின் எல்லை யைக் குறித்து கவன முள்ளவர்களாக வாழவேண்டும். நம்முடைய பரம தந்தையைவிட்டு தூரம் சென்றுவிட்டோம் என்று உணருகின்ற வேளை யிலே, அந்த சிறு பையனைப் போல, சீக்கிரமாக நாம் இருக்க வேண் டிய இடத்திற்கு திரும்ப வேண்டும். நல்ல மேய்ப்பனின் குரலை கேட்டு அவரின் பின் செல்லுகின்ற ஆட்டைப் போல, நாம் எப்போதும் நம் மேய்ப்பனின் சத்தத்திற்கு செவிகளை திறந்து வைத்திருக்க வேண்டும். நமக்குள்ளே வாசம் செய்யும் தேவ ஆவியானவர் நம்மை கண்டித்து உணர்த்தி நடத்துகின்றவராக இருக்கின்றார். அந்த உணர்த்துதலை அற் பமாக எண்ணிவிடக்கூடாது. நாம் எங்கு சென்றாலும், நம்முடைய இல க்கை குறித்து உணர்வுள்ளவர்களாக வாழ வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, அந்நியருடைய சத்தத்தை கேட்டு, அந்நிய னுக்குப் பின்செல்லாமல்,அவனை விட்டோடி, அவைகளின் மேய்ப்பனின் பின் செல்லும் ஆடுகளைப் போல, நானும் உம் பின்னே செல்ல வழிநடத் துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 23:37