புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 05, 2022)

ஜீவனும் மகிமையும் உண்டு

நீதிமொழிகள் 21:21

நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.


ஒரு மனிதனானவன் தேவனுக்கு பயந்து அவர் வழிகளிலே வாழ்ந்து வந்தான். அவனுடைய அயலிலே வாழ்ந்து வந்த அநீதியும், இறுமாப்பு முள்ள மனிதனொருவன், நீதியாக வாழும் மனிதனோடு சண்டை செய்து, பொய் குற்றச் சாட்டுகளை அவன் பேரிலே தொடுத்து, பொலி சாரிடம் முறையீடு செய்து, அவ னுக்கெதிராக வழக்கொன்றை தாக்கல் செய்தான். குற்றம் ஏதும் செய்யாமல், நீதியான வாழ் க்கை வாழ்ந்து வந்த அந்த மனி தன் நீதிபதிக்கு முன்பாக நின்றான். அவன் மனதிலே, அநீதி யின் வாழ்க்கை வாழ்ந்து வந்த அந்த அயலவனால், ஏற்படுத்தப்பட்ட காயங்களினாலும், வேண்டாத அழுத்தங்களினாலும், அவமானங்களினாலும், தனக்கு வரும் நீதியை காண விரும்புவதைப் பார்க்கிலும், அநீதியான வாழ்க்கை வாழும் தன் அயலவனுக்கு வரவேண்டிய கடும் தண்டனையை காண வாஞ்சையாக இருந்தான். பிரியமானவர்களே, இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகத்திலே நாமும் பல கஷ்டங்களையும் துன்பங்க ளையும் கடந்தே போகின்றோம். துன்மார் க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர் வதிக்கிறார். (நீதிமொழிகள் 3:33). துன் மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். (நீதிமொழிகள் 14:11). இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்களாகிய நீங்கள், தேவ கிருபையினாலே நீதிமான்களும், செம்மையான வழியிலே நடக்கு ம்படிக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றீர்கள். எனவே நீதிமான்களே, செம் மையான மார்க்கத்திலே நடப்பவர்களே, உங்கள் இருதயம் எதை வாஞ் சிக்கின்றது? உங்களுடைய வாசஸ்தலம் ஆசீர்வ திக்கப்படுவதையா? அல்லது துன்மார்க்கனுக்கு வரும் சாபத்தையா? உங்கள் வீட்டின் செழிப்பையா? அல்லது துன்மார்க்கனுடைய வீட்டின் அழிவையா? நம்முடைய இருதயம் எப்போதுமே நன்மையானவைகளையே வாஞ் சிக்க வேண்டும். தேவன்மேல் வாஞ்சையாக இருக்க வேண்டும்.இந்த உல கிலே தங்கள் அறியாமையினாலே, உணர்வற்றவர்களாக இறுமாப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அநே கராயிருக்கின்றார்கள். எனவே நீங்களோ சுயநீதியை நாடாமல், தயவுடன் தேவ நீதி உங்களில் நிறைவேற இடங்ககொடுங்கள். கர்த்தருடைய வேதத்திலே மனமகிழ்சி யாயிருங்கள். தீமைகளையும், அழிவுகளையும் விரும்பாமல், கர்த்தரை நம்பி எப்போதும் நன்மை செய்யுங்கள்.

ஜெபம்:

நன்மைகளின் ஊற்றாகிய தேவனே,என்னுடைய இருதயம் தீமைகளிலே பிரியப்படாமல், நன்மையானவைகளையே வாஞ்சித்து, அதையே காண விரும்பும் இருதயமாக இருக்கும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - அப் 7:59-60

Category Tags: