தியானம் (ஐப்பசி 03, 2022)
ஒன்றிணைக்கப்படாத கற்கள்
லூக்கா 11:23
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
ஒரு வீட்டுக்காரனானவன், தன் வீட்டு பின்புறமாக இருக்கும் பின் திண் ணையிலே (Patio), அழகான விலையுயர்ந்த கற்களை பதிக்கும்படிக்கு, அந்த வேலையிலே தேர்ச்சி பெற்ற சில மனிதர்களை வேலைக்கு அமர்த்தினான். கட்டுமான பணிகள் முடிந்தது, அவன் வீட்டின் பின்புறம் அழகாக காட்சியளித்தது. அவனுடைய பிள்ளைகள் அந்த திண்ணையிலே ஓடி விளையாடி வந்தார்கள். நாட்கள் கடந்து சென்றதும், அந்த திண்ணையிலேயுள்ள சில கற்கள் உறு தியில்லாமல் ஆட்டம் கண்டதை அவதானித்தான். கற்கள் தளர்ந்து போயிருக்கும் இடங்களை அவன் உற்று நோக்கிப் பார்த்த போது, அந்த கற்கள் சரியான முறையிலே மற்றய கற்களோடு இணைக்கப்படாதிருப்பதையும், அவைகள் மற்றய கற்களு க்கு மத்தியிலிருந்த போதும், தனித்திருப்பதை கண்டு கொண்டான். அப்படிப்பட்ட கற்கள் கூடிய சீக்கிரத்திலே, அதன் இடத்தைவிட்டு தளர்ந்து, அகன்றுவிடும் என்பதை அவன் அறிந்து, அவைகளை சரியாக இணைப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்தான். பிரியமானவர்களே, இந்நாட்களிலே சபைகளிலும் விசுவாசிகள் மத்தியிலே பிரிவினைகள், பிளவுகள் உண்டாகுவதை நாம் யாவரும் அறிந்திருக்கின்றோம். அதாவது பின் திண்ணையிலே உள்ள கற்கள் ஒன்றோடொன்று சரியாக இணைக் கப்படாதிருந்ததைப் போல, இவர்களும் சரியாக இணைப்படவில்லை. கிறிஸ்துவின் சரீரமான சபையிலே ஒரு விசுவாசியானவன் எப்படி இணைக்கப்பட முடியும்? சில வேளைகளிலே புதிதாக ஐக்கியத்திற்கு இணைந்தவர்களுக்கு ஏதாவது பொறுப்பை கொடுக்கின்றார்கள். பொதுவான விரும்பங்களும் நாட்டங்களுமுள்ள விசுவாசிகளை ஒன்றாக சேர்த்துவிடுகின்றார்கள். வீட்டு கூட்டங்களையும் ஒன்று கூடல்களையும் ஏற்படுத்துகின்றார்கள். இப்படியாக பலவிதமான நன்மையாக தோன்றும் காரியங்களை ஐக்கிய மேன்பாட்டிற்காக செய்து வருகின்றார்கள். நன்மையானவைகளை செய்வது நல்லது. ஆனால், தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவனும், ஆண்டவர் இயேசுவிலே ஒட்டப்பட்டவனாக இருக்க வேண்டும். அவரோடு ஐக்கியமுள்ளவனாக இருக்காதவனின் வாழ்க்கையானது, சீக்கிரத்திலே தளர்ந்து ஆட்டம் கண்ட அந்த தனித்த கற்களைப் போல தளரந்து போய்விடும். ஒருவன் இயேசுவில் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; அவரையலலாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
ஜெபம்:
அன்பின் பிதாவாகிய தேவனே, என்னுடைய ஐக்கியமானது உம்மோடும உம்முடைய திருக்குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் எப்போதும் இருக்கும்படிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 15:5