புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 02, 2022)

கணக்கு பார்க்கும் காலம்

மாற்கு 10:27

இயேசு அவர்களைப் பார் த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.


நிலம் நன்றாக விளைந்து வருகின்றது. ஆலைகளில் திராட்சை இரசம் நிறைந்திருக்கின்றது. கடந்த ஐந்து வருடங்களில் கிடையிலே மந்தை இரட்டிப்பாகி இருக்கின்றது. ஆனாலும், என் மனதிலே திருப்தியும் சமா தானமும் இல்லையே. என் வீட்டிலே இந்த உலகத்தின் திரவியங்கள் அநே கம் இருக்கின்றது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளை திரும்பி பார்க்கும் போது, என் சுபாவங்கள் ஒன்றும் மாற வில்லையே. நான் இன்னும் கடும் கோபியாகவே இருக்கின்றேன். எரிகி ன்ற நெருப்பிலே வார்த்த எண்ணெய் யைப் போல, இந்த உலக செல்வங் கள், என் மனமேட்டிமைக்கு உரம் போடடுக் கொண்டிருக்கி ன்றது. ஏழைகளை காணும் போது, இரக்கம் காட்ட வேண்டிய என் மனம், அவர்களை குறித்து விசனமடைகின்றது. பிறரை காணும் போது, அவர்களை நேசிப்பதற்கு பதிலாக, அவர்கள் என் பொருளை கொள் ளையடிக்கவே வருகின்றார்கள் என்ற எண்ணம் என்னில் வளர்கின்றது என்று ஒரு விசுவாசியாவன் தன் நிலையை குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான். இந்நிலையானது பாக்கியம் அல்ல, இது துர்ப்பாக்கியம் என்று தன் நிலையைக் குறித்து மனம் நொந்து கொண்டான். பிரியமானவர்களே, மீட்பராகிய இயேசு வழியாக நாம் தேவனிடத்தில் பெற்ற அழைப்பானது உண்மையுள்ளது. நாம் நம் ஆண்டவராகிய இயேசுவைப் போல மாற வேண்டும் என்பதே நம்முடைய பிதாவாகிய தேவனின் சித்தமாக இருக்கின்றது. நம்முடைய மாம்ச சிந்தையின்படி சிந்தித்துப் பார்த்தால் இது ஒரு கடினமான எதிர்பார்ப்பு. மனிதனுடைய பெலத்தினாலே இது ஆகாத காரியம். ஆனால் தேவனுடைய ஆவியினாலே எல்லாம் ஆகும். பிதாவாகிய தேவன்தாமே, தம்முடைய திருக்குமாரனாகிய இயேசுவிடம் இருந்த அதே ஆவியை நமக்கு ஈவாக கொடுத்திருக்கின்றார். நாம் நற்செயல் களை செய்யவும், திவ்விய சுபாவத்திலே வளரவும் வேண்டிய யாவை யும் நமக்கு அருளியிருக்கின்றார். கடந்த ஆண்டுகளை திரும்பி பாரு ங்கள். உங்கள் வாழ்விலே உங்கள் உள்ளான மனிதன் புதிதாக்க ப்பட்டிருக்கின்றதா? உங்களை காணுவோர், இவன் வாழ்விலே மாற்றம் உண்டு என்று சாட்சி கொடுகின்றார்களா? உங்கள் மனசாட்சி உங்களை குறித்து என்ன சொல்கின்றது என்று ஆராய்ந்து பாருங்கள். திவ்விய சுபாவங்களிலே வளரும்படி உங்களை அர்ப்பணியுங்கள். தேவனானவர் தாமே சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுவார்.

ஜெபம்:

உன்னதமான தேவனே,நான் என் வாழ்க்கையை அனுதினமும் உம் வார்த்தையின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்த்து திவ்விய சுபாவங் களிலே வளர்ந்து பெருக உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சகரியா 4:6