புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 01, 2022)

அறுவடையின் காலம் சீக்கிரமாய் வருகின்றது

1 கொரிந்தியர் 15:51

ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.


உயர்தர வகுப்பிலே படித்துவரும் மாணவனொருவன், பாசாலையிலும், வீட்டிலும் மிகவும் ஊக்கத்தோடு தன் பாடங்களை படித்து வந்தான். தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை வீணாக்காமல், படித்த பாடங்களை மீள்ஆய்வு செய்வதிலும், தனக்கு விளக்கம் குறைவாக இருக்கும் பகுதிகளை குறிப்பெடுத்து, ஆசிரியர்களின் உதவியை தேடுவதிலும் ஆர்வமாக இருந்தான். அவனோடு கல்வி கற்ற சக மாணவ ர்கள் சிலர் அவனை பார்க்கும் போது, இவனுக்கு வேறு வேலை இல்லை. வாழ்க்கையை அனுபவி க்க தெரியாதவன் என்று அவனை கேலி செய்து வந்தார்கள். அயலில் வசித்து வந்தவர்களும், அவனு டைய உறவினர்களில் சிலரும்;, வாழ் க்கையில் பல அம்சங்கள் உண்டு. புத்தக பூச்சியாக இருந்தால் மட்டும் போதுமா? வாழ்விலே சமப்படுத் தல் இருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டார்கள். ஆனால், அந்த மாணவனோ, ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு. இந்த வயதிலே, நான் மாணவனாக இருக்கின்றேன், இது நான் கல்வி கற்க வேண்டிய காலம். வரவிருக்கும் இறுதிப் பரீட்சை என் எதிர்காலத்தின் அஸ்திபா ரமாக இருக்கும் என்று தன்பெற்றோரிடம் கூறி, தான் செய்ய வேண் டிய முக்கியமான காரியங்களை கருத்தோடு செய்து வந்தான். இறுதிப் பரீட்சை முடிந்து, பரீட்சையின் முடிவுகள் வெளியாகிய போது, அவன் தான்; வாழ்ந்த மாவாட்டத்திலே, முதன்மையானவனாக அதி விஷேட சித்தியடைந்தான். அவன் தன் பிரயாசத்தின் பலனை கண்டடைந்தான். பிரியமானவர்களே, அந்த மாணவன் சொன்னது போல, ஒவ்வொன்றி ற்கும் ஒரு காலம் உண்டு. இந்த உலகத்திலே நம்முடைய வாழ்க்கை யானது விதைப்பின் காலமாக இருக்க வேண்டும். இந்த உலகத் திலே நாம் அறுப்பவையெல்லாம் ஒரு நாள் அழிந்து போய்விடும். ஆனால் நாம் நித்தியமானதை அறுவடை செய்யும்படிக்கு, இந்தக் காலத்திலே தேவ வார்த்தையின்படி நம்முடைய கிரியைகளை நடப்பிக் கவேண்டும். ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந் திருக்கும்;. பலர் நம்மைப் பார்த்து பலவிதமாக பேசிக் கொள்ளட்டும். ஆனால், ஜீவ கிரீடம் சூடும் காலம் ஒன்று உண்டு. அது நம்முடைய அறுப்பின் காலம். அது சீக்கிரமாய் கடந்து வரும். எனவே, நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, மண்ணா னவனுடைய சாயலை களைந்து வானவருடைய சாயலை அணிந்து கொள்ளும் நாள்வரைக்கும் என்னை உம்முடைய வழியிலே நடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 4:7-8