புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 30, 2022)

நாளுக்கு நாள் ஒருமைப்பாட்டில் தேறுங்கள்

எபேசியர் 4:31

சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.


இந்த நாட்கள் அன்றைய நாட்கள் போலல்ல என்று, இன்று பல மனித ர்கள் திருமண ஒப்பந்தங்களை அற்பமாக எண்ணுகின்றார்கள். திரும ணம் நடக்கும் முன்பு, இது தேவனால் உண்டானது என்று கூறிக் கொள்கின்றார்கள். திருமணமாகிய பின்பு, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருமைப்பாட்டில் வளர வேண்டும் என்ற எண்ணத்தைக் களைந்து, இவள் எனக்கு ஏற்றவள் அல்ல அல்லது இவர் எனக்கேற்றவர் அல்ல என்று கூறி, இலகுவாக தங்கள் ஒப்பந்தங்களை உடைத்துக் கொள்கின்றார்கள். திருமண வாழ்க்கையிலே அன் பிற்கும், கீழ்படிதலுக்கும் இடமில்லா மல், ஒருவருக்கு ஒருவர் சட்டம் வைக் கும் ஒப்பந்தமாக மாறிவிடுகின்றது. சரி, முதலாம் ஒப்பந்தத்தை தவறு தலாக, அவரசப்பட்டு உடைத்து விட்டார்கள் என்று வைத்துக் கொள் வோம். அதன் பின்னரும் தங்களை மாற்றிக் கொள்ளாமல், மறுபடியும் நூற்றுக்கு நூறு வீதம் தங்கள் எண்ணத்திற்கு ஒத்துப் போகும் துணையையே தேடுகின்றார்கள். இதனால், சிலர் திருமணமாகாமல் ஒன்றாக வாழ்ந்துவிடுவோம் என்று தீர்மானிக்கின்றார்கள். அதற்கு இன்று பல நாடுகளில் சட்டங்களும் இடம் கொடுகின்றது. இவ்வண்ணமாகவே, இன்று சபைகளிலும் சில விசுவாசிகள் இருக்கின்றார்கள். அதாவது, சபை ஐக்கியத்தில், ஒருவரை ஒருவர் தாங்கி, விட்டுக் கொடுத்து, நீடிய பொறுமையயோடு வாழ்ந்து, ஒருமைபாட்டில் தேறுவதற்கு இடங்கொடுக்காமல், சபையைவிட்டு போய்விடுகின்றார்கள். ஒருவேளை அவ ர்களுடைய தீர்மானம் சரியாக இருந்தால், அவர்கள் செல்லும் சபையிலே பூரணர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனநி லையை மாற்ற மனதில்லாமலும், தேவ சித்தம் நிறைவேற இடங்கொ டாமலும்; தங்கள் எண்ணத்திற்கு ஏற்ற இடங்களையே தேடுன்றார்கள். அதை கண்டு பிடிக்க முடியாதிருக்கும் போது, எந்த சபைலும் அங்கத்தவராகாமல், தங்களை அர்ப்பணிக்காமல், விருந்தாளிகவே இருந்து விடுகின்றார்கள். பிரியமானவர்களே, சற்று சிந்திங்கள். நீங்கள் இப்படியான சிந்தை கொள்ளாமல், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, தேவனுடைய திருச்சித்தம் நிறைவேற காத்திருங்கள். எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். உங்கள் தியாகங்களுக்கு பெரிதான பலன் உண்டு.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, நான் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந் தரிக்காமலும், உலகத்தினால் உண்டாயிருக்கும் சுயாதீனத்தினால், நான் தவறான தீர்மானங்களை எடுக்காதபடிக்கும் என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 4:31-32