தியானம் (புரட்டாசி 29, 2022)
உங்கள் பிரயாசம் விருதாவாகாது
1 கொரிந்தியர் 15:58
எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து
சபையிலே தேவ ஊழியத்திற்காக பத்து ஆண்டுகளுக்கு மேலாக கடு மையாக உழைத்தேன். பல தியாகங்களை செய்து இராப் பகலாக சபையோர் மத்தியிலே பிரயாசப்பட்டேன் ஆனால் இப்போது அதைக் குறித்த நன்றி எவருக்கும் இல்லை. என்னை அற்பமாக எண் ணுகின்றார்கள். நான் என் இளமை நாட்களை இந்த உலகிலுள்ள வேறு வேலைகளிலே முதலீடு செய்திருந் தால், நன்மையாக இருந்திருக்குமோ என எண்ணுகின்றேன் என ஒரு மனி தனானவன் தன் போதகரிடம் சலிப் போடு முறையிட்டான். சபையிலே நடந்த சில அசௌகரியமான காரிய ங்களினால் அவன் மனம் நொந்திருக் கின்றான் என போதகரானவர் அறிந் திருந்தார். அவனை எப்படியாவது சிந்திக்க வைக்க வேண்டும் என்ற எண்ண த்துடன், அவனை நோக்கி: சரி, 15 ஆண்டுகளுக்கு முன், உன்னுடைய சின்ன மகனுடைய 5 வது பிறந்த தினமன்று, நான் அவனுக்கு கொடுத்த அந்த சின்ன சைக்கிளை நீ நாளைக்கே கொண்டு வந்து என்னிடம் கொடுத்து விடு என்றார். சற்று அதிர்ச்சியடைந்த அந்த மனிதனானவன்: என்ன போதகரைய்யா அவர்களே, இப்படியாக பேசுகின்றீர்கள். 15 ஆண்டுகளுக்கு முன் பரி சாய் கொடுத்த பொருளை மறுபடியும் கேட்கி ன்றீர்களே, அவன் வளர் ந்து இப்போது பல்கலைகழகத்திலே படிகின் றான். அந்த சைக்கிள் இப்போது எங்களிடம் இல்லை என்றான். அதற்கு அவர் மறுமொழியாக: சரியாக சொன்னாய் மகனே, உனக்காக இரத்தம் சிந்தி தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்த ஆண்டவர் இயேசுவுக்கென்று கொடுத்தவை களை நீ பிரயோஜனம் அற்றவைகள் என்று, அதை மறுபடியும் கேட் கின்றாயே, அது உன் நல் மனசாட்சிக்கு சரியாக தோன்றுகின்றதா என்று இன்று இராத்திரியே சிந்தித்துப் பார் என்று அவனிடம் தயவாக அவர் கூறினார். பிரியமானவர்களே, ஆரம்ப நாட்களிலே, நீங்கள் இயே சுவின் நாமத்திலே தேவனாகிய கர்த்தருக்கென்று கொடுத்த நேரத்தை யும், பிரயாசத்தையும், பொருட்களையும் குறித்து இன்று துக்கப்படுகி ன்றீர்களா? ஒருவேளை மனிதர்கள் உங்களை மறந்து போகாலாம் அல்லது நீங்கள் செய்த நன்மைகளை நீங்களே மறந்து போகலாம். ஆனால் அவை யாவும் கர்த்தருடைய கணக்கிலே இருக்கின்றது. கர்த்த ருக்குள் உங்கள் பிரயாசம் ஒருநாளும் வீணாகாது. எனவே, வார்த்தை யினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல் லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னி லையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
ஜெபம்:
வாக்கு மாறாத தேவனே, இந்த உலகத்திலுள்ள உபத்திரவங்களி னால் நான் சோர்வடைந்து பின்னிட்டு போய்விடாதபடிக்கும்இ மனம்பதறி அவிசுவாசமான வார்த்தைகளை பேசாதபடிக்கும் என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:16