புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 28, 2022)

பெலவீனம் தலைதூக்கும் போது...

எபேசியர் 6:10

கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.


பாரச் சுமைகளும், மாம்சத்தின் இச்சைகளும் பஞ்சிலே பற்றும் நெரு ப்பைப்போல என்னைப் பற்றிக் கொள்கின்றது. உலக ஆசைகள் நயங்காட்டி அழைக்கின்றது. நன்மையானது நடப்பிக்கப்படுகின்றது என மனி தர்கள் கருதும் கல்வி நிலையங்களிலும், வேலை இடங்களிலும், கடைத் தெருக்களிலும், வீட்டிலே என் கையிலே இருக்கும் தொலைபேசி உபகரணத்திலும், பாவச் சோதனைகள் மலிந்து கொண்டே போகின்றது. பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் என்று எவ் வளவு முயற்சித்தாலும், அதை என் னால் நிறைவேற்ற முடியாமல் இருக்கி ன்றது என ஒரு மனிதனானவன் தனக் குள்ளே தவித்துக் கொண்டிருந்தான். சில வேளைகளிலே நாமும் இத்தகைய சூழ்நிலைகளை அவ்வப்போது கடந்து போக நேரிடுகின்றது. தேவ னாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். தேவனுடைய மகிமை அவன்மேல் இருந்தது. ஆனால் அவன் தேவனாகிய கர்த்தர் நியமித்த ஒழுங்குக்கும், அவருடைய வார்த்தைக்கும் கீழ்படியாமல், போன நாளிலே, தன்னிடமிருந்த தேவ மகிமையை இழந்து அவன் பாவியாகி, அவன் பெலவீனம் அவனை மேற்கொண்டது. எனவே அவனுடைய மனம் மண்ணாசையோடு ஒட்டிக் கொள்ளும் தன்மையுள்ளது என்பதை கர்த்தர் நன்கு அறிந்திருக்கின்றார். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில் லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியராகிய ஆண்டவர் இயேசு நமக்கிரு க்கிறார். ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண் டும் என்பதற்காகவே தம்மை பலியாக ஒப்புக் கொடுத்தார். தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவரும், நமக்காக வேண்டுதல் செய்கிற வரும் அவரே. எனவே உங்கள் சுயபெலத்தினாலும், நீங்கள் செய்யும் மாற்று வழிகளினாலும், நீதிமான் ஆகலாம் என்ற எண்ணத்தை முற்றாக விட்டுவிடுங்கள். பரிசுத்த ஆவியானவரின் துணையை நாடுங்கள். வேத த்தை கருத்தோடு வாசிக்க ஆரம்பியுங்கள். அனுதினமும் ஒரு நேரத்தை குறித்து சில நிமிடங்கள் ஊக்கமாக ஜெபியுங்கள். உங்கள் சபையிலே போதிக்கப்படும் ஞாயிறு செய்திகளை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். உங்களைத் தாழ்த்தி உங்கள் சபையின் அதிகார ங்களுக்கு கீழ்படியுங் கள். கர்த்தர் நிச்சயமாக உங்களை பெலப் படுத்தி நடத்திச் செல்வார்.

ஜெபம்:

நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமல் இருக்கின்ற தேவனே, உம்முடைய திருவசனத்தை கேட்டு அதன்படி செய்வதற்கு எனக்கு மனத் தாழ்மையை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபி 12:1-3