புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 27, 2022)

உலகத்தினால் உண்டாகும் மேன்மை

சங்கீதம் 103:17

அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.


மனிதர்கள் மத்தியிலே, உயர்ந்தவன், தாழ்ந்தவன், கற்றவன், கல்லா தவன், அரசர்கள், பிரபுக்கள், மேன்மக்கள், கீழ்மக்கள், ஐசுவரியவான், ஏழை என்று உலகத்திலே பல பாகுபாடுகளை காண்கின்றோம். சிலர் இடாம்பீகரமான மாளிகைகளிலே பலத்த காவலோடு, சிறப்பு குடிகளாக விருந்துகள் உண்டு வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் களிப்பின் சத்தம் தொனிக்கின்றது. வேறு சில இடங்களிலே ஏழைக் குடிலிலே, ஆதரவவற்றிருக்கும் மழலையின் அழுகுரல் ஒலிக்கின்றது. இந்த சத்தங்களையும் தேவன் அறியாதி ருக்கின்றாரோ? அவர் நிச்சயமாக அறிவார். சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அத ற்கு எல்லையைக் கட்டளையிட்ட்ட தேவனானவர், களியாட்டமான வாழ் க்கை வாழும் மனிதர்களுக்கும், கடும் கஷ;டங்கள் மத்தியிலே துயரப்ப டும் ஏழைகளின் கஷ;டங்களுக்கும் ஒரு எல்லையை வைத்திருக்கின்றார். எப்படிப்பட்ட மனுஷனாக இருந்தாலும், மனுஷனுடைய நாட்கள் புல்லு க்கு ஒப்பாயிருக்கிறது. இந்த உலகத்திலே மேன்மையாக இருக்கும் மனிதனுடைய உலக மகிமையின் உச்சக் கட்டமானது, புல்லின் பூவிற்கு ஒப்பாயிருக்கின்றது. காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற் போய்விடும். அது இருந்த இடமும் இனி அதை அறியாது. அவ்வண்ண மாகவே, இந்த உலகத்தின் மேன்மக்களின் ஆவி பிரியும் போது, அவர்கள் தங்கள் மண்ணுக்குத் திரும்புவார்கள். அந்நா ளிலே அவர்கள் யோசனைகள் அழிந்துபோம். யாக்கோபின் தேவ னைத் தன் துணை யாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத் தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென் றைக்கும் உண்மையைக் காக்கிறவர். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ் செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களு க்கு ஆகாரங் கொடுக் கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலை யாக்குகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்க ப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிக ளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் வித வையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழி யையோ கவிழ்த்துப் போடுகிறார். கர்த்தருக்கு பயந்து அவருடைய வழி களிலே நடக்கின்ற வர்கள் தேவனுடைய வீட்டிலே நித்தியமாய் நிலை த்திருப்பபார்கள்.

ஜெபம்:

தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகின்ற தேவனே, இந்த உலக மேன்மை மாயையும்இ நஷ்டமும், குப்பையும் என்பதை உணர்ந்து, அழியாத நித்திய மேன்மையை தேடும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங் 146:1-10