புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 26, 2022)

நம் உருவத்தை அறிந்த தேவன்

ஏசாயா 64:9

கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக் கொள்ளாமலும் இருப்பீராக;


ஒரு குயவனுடைய வீட்டிலே பல விதமான பாத்திரங்கள் இருந்தது. சில சமையலறையிலும், வேறு சில விருந்தாளிகளை வரவேற்கும் மண்டபத்திலும், சில சாப்பாட்டு மேஜையிலும், இன்னும் சில வீட்டிற்கு வெளியிலே தோட்டத்திலும் இருந்தது. இப்படியாக பற்பல பாத்திர ங்கள் வௌ;வேறான வடிவங்களிலேயும்; வெ;வேறுபட்ட உபயோகத்திற் கென்றும் இருந்தது. அவை ஒவ்வொ ன்றின் கொள்ளலவையும், அவைகள் தாங்கக்கூடிய: பாரங்களையும், வெப் பநிலையையும், கடும் குளிரையும், அவைகளின் உபயோகமுள்ள நாட்க ளையும் அவன் நன்கு அறிந்திது வைத் திருந்தான். அவன் செய்த பாத்திரங்க ளைப் பற்றி அவன் திட்டமாக அறிந் திருந்ததால், அவைகளை அதனதன் இடத்திலே, அதன் உபயோகத்திற்காக வைத்திருந்தான். தன்னுடைய முழு புய பலத்தையும் தான் உண்டுபண்ணின மட்பாண்டங்களின்மேல் அவன் ஒருபோதும் காண்பிப்பதில்லை. நம்முடைய பரம தந்தையாகிய தேவனாகிய கர்த்தரும், நாங்கள் குயவனாகிய அவருடைய கையில் களிமண் என்றும், நாம் அவருடைய கரத்தின் கிரியைகள் என்றும் அறிந் திருக்கின்றார். நம்முடைய நீதிகளெ ல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம் என்பதையும் அறிந்திருக்கின்றார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். அவருக்கு ஒப்பா னவர்கள் யாரும் இல்லை என்றும், தம்முடைய சர்வ வல்லமைக்கும், பரிசுத்தத்திற்கு முன்பும் யாரும் நிலைநிற்க முடியாது என்பதையும் அவர் அறிந்திருக்கின்றபடியால், அவர் எப்பொழுதும் கடிந்து கொள் ளாமலும் என்றைக்கும் கோபங்கொண்டிராமலும், நம்மேல் மனதுருகின் றார். தம்முடைய மிகுந்த கிருபையை நம்மேல் பொழிந்து, இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். இந்தப் மகத்துவமுள்ள பொக்கிஷத்தை மண்பாண் டங்களில் (இந்த சரீரத்திலே) நாம் பெற்றிருக்கிறோம். நாம் விழித்தெ ழும்போது, மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் களைந்து, வானவருடைய சாயலை யும் அணிந்துகொள்வோம். அழிவு ள்ளதாகிய சரீரத்திற்கு அழியாமை யையும், சாவுக்கேதுவாகிய இந்த சரீரம் சாவாமையையும் தேவன் அந்நாளில் நமக்கு அருளுவார்.

ஜெபம்:

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல இரங்குகின்ற தேவனே, நான் உம்மைப் பற்றிக் கொண்டு பயபக்தியோடு, உம்மிலே நிலைத்திருந்து, கிறிஸ்துவின் சாயலிலே விருத்தியாக எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:6-7