புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 25, 2022)

கிறிஸ்துவில் நிலைத்திருங்கள்

யோவான் 15:4

நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.


ஒரு ஊரிலே வாழ்ந்த தேவ பயமுள்ள ஊழியயொருவர், தினமும் வேத த்தை வாசித்து தியானிப்பதிலும், அவைகளை தன் வாழ்விலே கைகொ ள்வ திலும், ஊக்கமாக தேவனோடு உறவாடுவதிலும் உண்மையுள்ள வராக இருந்து வந்தார். எப்பொழுதும் ஊரிலே வாழ்ந்து வரும் ஜன ங்கள் பயன்பெறும்படிக்கு சில நன்மையான செயத்திட்டங்களையும் செய்து வந்தான். அவருடைய கீர்த்தி ஊரெங்கும் பிரசித்தமாயிற்று. காலங் கள் கடந்து சென்று, சில தலைமு றைகள் கடந்து சென்ற போது, அவ ருடைய சந்ததியினர், அந்த ஊழியர் செய்த செயற்திட்டங்களை விரிவுபடு த்தி செய்து வந்தார்கள். அவர்கள் செயற்படுத்தி வந்த கிரியைகளின் நிமித்தம் அவர்களுக்கு பல ஊழியர்களோடும், ஊழியங்களோடும் தொட ர்பு இருந்து வந்தது. மக்கள் மத்தியிலே அவர்களுக்கு நற் பெயர் நிழ வியது. ஆனாலும், தேவ பயத்தோடு வாழ்ந்து வந்த அந்த ஊழியரைப் போல, தேவனோடுள்ள தனிப்பட்ட உறவு அவர்களுக்கு இல்லாதிரு ந்தது. அவர்கள் தங்களை அறியாமலே தங்கள் கிரியை களினாலே நீதிமான்களாகின்ற நிலையை அடைந்து விட்டார்கள். இப்படியாகவே, ஆண்டவராகிய இயேசு இந்த உலகத்தில இருந்த நாட்களிலே, தாங்கள் மோசேயின் வழி வந்தவர்கள், ஆபிரகாம் தங்களுடைய தந்தை என்று மேன்மை பாராட்டிய பரிசேயர், வேதபாரகர், என்று சில குழுவினர் இருந்தார்கள். அவர்கள் தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவே ண்டுமென்று செய்து வந்தார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தை வெளிகளில் வந்தனங்களையும், பெற்று வந்தார்கள். ஆனால், வேதத்தை கற்று தேர்ந்த அவர்களுக்கோ மீட்பராகிய இயேசு யார் என்பதை உணர முடியாமல் போய்விட்டது. பிரியமானவர்களே, நற்பெ யர்களும், செயற் திட்டங்களும் நல்லது. ஆனால் அப்படிப்பட்ட செயற் திட்டங்களை ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்களும் கூட நடப்பித்து வருகின்றார்கள். அவர்களுக்கும் இந்த உலகிலே மேன்மையான பெயர்கள் உண்டு. எனவே நற்கிரியைகளை செய்வதினாலே ஒருவனுமே நீதிமான்களாகிறதில்லை. நாம் திராட்சை செடியிலே கொடிகள் இணைந்திருப்பதைப் போல, கனிகொடுக்கும்படி மெய்யான திராட்சை செடியாகிய இயேசுவில் ஒட்டப்பட்டவர்களாக இருக்க வேண்டும். நம் தனிப்பட்ட வாழ்க்கையிலே அவரோடு தினமும் உறவாடுகின்றவர்களாகவும், அவரை அறிகின்ற அறிவிலே தினமும் வளர்ந்து பெருகின்றவர்களாகவும் வாழ வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, நான் தினமும் உம்பாதத்திலே அமர்ந்திருந்து வேதத்தை வாசித்து, தியானித்து, ஊக்கமாக ஜெபம் செய்து, உம்முடைய சாட்சியையே நாடி வாழுகின்றவனாக இருக்க கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 5:36