புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 24, 2022)

ஆத்துமாவை காத்துக் கொள்ளுங்கள்

1 இராஜாக்கள் 2:4

நீ உன் தேவனாகிய கர்த்தரு டைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நட க்கும்படிக்கு அவருடைய காவ லைக் காப்பாயாக.


சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதினுடையஸ்தானத்திலே சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவானபோது, அவன் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜன த்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன். ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க வும், நன்மை தீமை இன்னதெ ன்று வகையறு க்கவும், அடியே னுக்கு ஞானமுள்ள இருதயத் தைத் தந்தருளும்; ஏராளமாயிரு க்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உக ந்த விண்ணப்பமாயிருந்தது. அத னால், தேசங்களின் ராஜாக்களும், குடிகளும் கண்டு அதிசயிக்கதக்க ஞானமுள்ள இருதயத்தையும், ஐசு வரியத்தையும் மகிமையையும் தேவன் அவனுக்கு அருளினார். தேவ னாகிய கர்த்தர் எதற்காக இவைகளை சாலொமோன் ராஜாவிற்கு கொடு த்தார்? தன் இஷ;டப்படி தேசங்களிலுள்ள ராஜஸ்திரிகளை தன் மனைவி களாகிக் கொள்வதற்காகவா? அல்லது தென் தேசத்து ராஜாஸ்திரிக்கு முன்னிலையில் கீர்த்தியுள்ளவனாக இருக்கும்படிக்காகவா? இல்லை, தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியா யங்களையும், சாட்சி களையும் கைக்கொள்ளவும், அவர் வழிகளில் நடக்கும்படிக்கும் அவருடைய காவலைக் காப்பாதற்காகவுமே அவனு க்கு ஒப்பற்ற ஞானத்தையும், திராளான ஐசுவரியத்தையும் கொடுத்தார். ஆனால், ஆண்டுகள் கடந்து சென்ற போது, அவனுடைய திரளான ஐசு வரியமும், மிகையான ஞானமும் அவன் ஆத்துமாவிற்கு சற்றேனும் உபயோகமற்றதாக மாறும்படிக்கு, அவன் தன் தகப்பனாகிய தாவீது தின் நல்ஆலோசனையை பின்பற்றாமலும், தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுக்காமல் பின் வாங்கிப் போனான். அவனுக்கிருந்த அந்த ஞானத்தினாலும், ஐசுவரியத்தினாலும் பலன் என்ன? பிரியமானவர்களே, நீங்கள் அதிபதியாக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும், ஐசுவரியவான்களாவோ, ஏழையாகவோ இருந்தாலும், தேவனுடைய வார் த்தைக்கு எப்போதும் கீழ்படிகின்றவர்களாக இருங்கள். அப்பொழுது, நீங் கள் உங்கள் ஆத்துமாவிற்கு நன்மையை செய்கின்றவர்களாக இருப்பீர்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, நான் என்ன செய்தாலும், எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், உம்முடைய ராஜ்யத்தின் பிள்ளையாக வாழ்வதற்கும் உம்மை பற்றிக் கொள்ளும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 4:23