புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 22, 2022)

ஆபத்தை கண்டு அஞ்சாதிருங்கள்

சங்கீதம் 112:7

துர்ச்செய்தியைக் கேட்கிற தினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.


ஒரு மனிதனாவன் தேவனுக்கு பயந்து அவர் வழியிலே மிகவும் பயபக்தியுடன் வாழ்ந்து வந்தான். கர்த்தரோ அவன் கையிட்டு செய்த காரியங்கள் யாவையும் வாய்க்கப் பண்ணினார். அவன் வசதியுள்ள வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஒருநாள், எதிர்பாராத விதமாக, மோதி யடிக்கும் கடும் புயல் காற்று, அவன் வாழ்ந்த ஊரை தாக்கிற்று. அத னால் அவனுடைய வீடும், அவன் சொத்தும் அழிந்து போய்விட்டது. இப் போது அவன், தெருவிலே வாழும் ஏழையைப் போல, அகதி முகாமொ ன்றிலே, தன் குடும்பத்தோடு தஞ்சம் அடைந்தான். வழமைபோல, அவன் காலையிலே எழுந்து தன் தேவ னாகிய கர்த்தரை நோக்கி, தன்னை யும் தன் குடும்பத்தையும் கடும் புயல்காற்றிலிருந்து காப்பாற்றியதற்காக நன்றியை தெரிவித்தான். அதுவுமல்லாமல், தம்மை தேவன் உயிரோடே வைத்திருப்பதன் நோக்கத்தை நிறைவேற்ற பெலன் தந்து நடத்தும் என்று விண்ணப்பம் செய்தான். அவன் கர்த்தருக்கு பயந்து அவர் வழி யிலே வாழ்ந்து வந்ததினால், அவன் நம்பிக்கையானது எப்போதும் தேவ ன் பேரில் இருந்தது. வானத்தையும், பூமிமையும், அதிலுள்ள யாவை யும் சிருஷ;டித்த தேவனை அவன் பற்றிக் கொண்டிருப்பதையே அவன் மேன்மையாக கருதி, அதன்படிக்கு வாழ்ந்து வந்ததால், இந்த உலகிலே அவனுக்கு ஏற்பட்ட நஷ;டங்கள், அவன் தன் தேவன்பேரில் வைத் திருந்த விசுவாசத்தை அவித்துப் போடவுமில்லை. அவன் தேவன்மேல் கொண்டுள்ள அன்பு ஒழிந்து போகவில்லை. முன்பு போலவே, மற்றய மனிதர்களோடு அவன் தயவாய் பேசி வந்தான். அவன் சாந்த குணம் மாறிப் போகவுமில்லை. பெரு நஷ;டத்தின் மத்தியிலும் ஏன் அவனு டைய திவ்விய சுபாவங்கள் மாறிப்போகவில்லை? கர்த்தர்மேல் நம்பி க்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனு ஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால் வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ;ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷ த்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான். தேவனுக்கு பயந்து நடக்கின்ற மனிதனுடைய வாழ் விலே, அவனிடமிருக்கும் இந்த உலக செல்வங்கள் அழிந்து போனா லும், அவன் இருதயத்திலுள்ள பரலோக செல்வங்கள் நித்தியமானவை கள். அவை ஒழிந்துபோவதில்லை. இதனால் இவன் அசைக்கப்படுவதி ல்லை.

ஜெபம்:

இதுவரை என்னை நடத்தி வந்த தேவனே, கடும் புயல் மோதினாலும் கன்மையின் மேல் கட்டப்பட்ட வீட்டைப்போல உறுதியாய் என் வாழ்வு உம்மில் நிலைத்திருக்கும்படிக்கு என்னை வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 16:33