புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 21, 2022)

நீங்கள் பாக்கியம் பெற்றவர்களா?

சங்கீதம் 73:28

எனக்கோ, தேவனை அண் டிக்கொண்டிருப்பதே நலம்;


'மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை. அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள். அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது. இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிரு ந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகி றார்கள்.' இன்று இப்படிப்பட்ட வாழ்க் கையை வாழ்பவர்களை பார்த்து பலர் 'இவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்' என்றவாறாக கூறி வருகின்றார்கள். துன்மார்க்கமான வாழ்க்கை வாழ்பவர் கள்; இத்தகைய வாழ்க்கையை இந்த உலகிலே வாழ்கின்றார்கள் என்று தேவபிள்ளையாகிய ஒருவர் தன் இருதயத்திலே விசனமடைந்தார் என்று சங்கீதப் புத்தகத்திலே வாசிக்கின்றோம் (சங்கீதம் 73). இந்த உலக பொக்கிஷத்தோடும், செல்வம், சுகம்;, பேர், புகழோடும் வாழ்வது ஒருபோ தும் பாக்கியமுள்ள வாழ்க்கை அல்லவே. ஒரு வேளை இவர்கள் இந்த உலகத்திலே சுகஜீவிகளாக காணப்பட்டாலும், அவர்களுக்கு பரலோ கிலே யாருமில்லையே. இவர்கள் இந்த பூமியில் ஆஸ்தியை பாக்கியம் என்று நம்பியிருப்பதால், இவர்கள் ஆத்துமா இந்த மண்ணோடு ஒட்டிக் கொள்ளுகின்றது. இவர்களுடைய பாக்கியம் யாவும் ஒருநாள் அழிந்து போய்விடும். உண்மையிலே தேவ பாக்கியத்தை பெற்றவர்கள் யார்? கர்த்தரை தெய்வமாக கொண்டு, கர்த்தரோடு இருப்பதும், அவருடைய கிரியைகளை நடப்பிப்பதுமே பாக்கியம். அவர் நம் வலதுகையைப் பிடி த்துத் தாங்கி வருகின்றார். தம்முடைய ஆலோசனையின்படி அவர் நம்மை தினமும் நடத்தி, முடிவிலே நம்மை மகிமையில் ஏற்றுக் கொள் வார். இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு, பரலோ கத்தில் தேவன்தாமே பரம தந்தையாக இருக்கின்றார். பூலோகத்தில் வாழும் நாட்களிலும் இவர்களுடைய கிரியைகள் யாவும் தேவ னைச் சார்ந்தி ருக்கின்றது. பிரியமானவர்களே, இந்த உலகத்தில் உண்டாகும் வாழ்க் கையின் செல்ல செழிப்பை தேவனுடைய ஆசீர்வா தத்தின் அளவுகோ லாக வைத்திருப்பது தவறு. எந்த சூழ்நிலையிலும், ஆவியில் எளிமையு ள்ளவர்களாக, சாந்தகுணமுள்ளவர்களாக, நீதியின் மேல் பசிதாகமுள்ள வர்களாக இரக்கமுள்ளவர்களாக, இருதயத்தில் சுத்தமு ள்ளவர்களாக, சமாதானம் பண்ணுகிறவர்களாக, நீதியினிமித்தம் துன்ப ப்படுகிறவர்க ளாக வாழ்ந்து தேவ பாக்கியத்தின் சுதந்திரர்களாக உறுதியுடனும், திடமனதோடும் தேவனுக்குரிய கிரியைகளை நடப்பிப்போமாக.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, எல்லா சூழ்நிலைகளிலும், உம்மு டைய வார்த்தைக்கு செவிகொடுத்து, தேவ பயத்துடனே உம்முடைய செம்மையான வழியிலே நடக்கும்படி எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:3-12