புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 20, 2022)

மேட்டிமையாய் இராதேயுங்கள்

எரேமியா 13:15

நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமை யாய் இராதேயுங்கள்; கர்த் தர் விளம்பினார்.


எரேமியா என்னும் சிறுபிள்ளையை, அவனுடைய இளவயதிலேயே, தேவனாகிய கர்த்தர்தாமே அவனை பரிசுத்தம் பண்ணி, தம்முடைய வார்த்தை அறிவிக்கும்படி, அவனைத் தன்னுடைய தீர்க்கதரியாக வேறு பிரித்தார். இந்த தீர்க்கதரிசியின் நாட்களிலேயே தேவனுடைய ஜன ங்கள், பாபிலோனுக்கு சிறைப்பட்டு போகும்படிக்கு, தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவினிடத்தில் ஒப்புக் கொடுத்தார். அந்த நாட்களிலே தேவ ஜனங்களுடைய அக்கிரமங்கள் பலத் திருந்தது. ஆனாலும், அந்நாட்களிலே இரு ந்த ஆசாரியர்களும், தங்களை தேவனுடைய தீர்க்கதரிசிகள் என்று சொல்லிக் கொண்டவர்களும், வீண ர்களாக, சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனங்களின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள் என்று அவர்களைக் குறித்து தேவனாகிய கர்த்தர் கூறியிருந்தார். ஆனாலும் தேவனுடைய தாசனாகிய எரேமியா சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர் த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் சொல்லி முடித்தபோது, ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும். எருசலேம் தேவ ஆலயம் சீலோவைப்போ லாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாய்ப்போம் என்று, நீ கர்த் தருடை ய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள். காரணம் என்னவெனில், அவர்களுடைய ஆசாரியர்கள், தீர் க்கதரிசிகள், மற்றும் ஜனங்களுடைய இருதயங்கள் கடி னப்பட்டிருந்தது. தேசத்தின் அக்கிரமும் மிகையாகவும், ஜனங்கள் அடிமைத்தனத்திற் குள் செல்லும் நாட்கள் அண்மித்திருந்த வேளையிலும், தேசத்தின் ராஜா வும், ஜனங்களும் எவைகளை கேட்க விரும்பினார்களோ, அவைக ளை யே மற்றய தீர்க்கதரிசிகள் முகஸ்துதிக்காக, பொய்யாக தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். இன்றைய நாட்களிலும், சில மனிதர்கள் ஆசீர்வாதத்தின் வார் த்தைகளை மட்டும் பேசும் ஊழியர்களையே நாடித் தேடுகின்றா ர்கள். கர்த்தருடைய கடிந்து கொள்ளுதலையும், சிட்சையையும் அசட்டை செய்து, தேவனுடைய சத்திய வார்த்தைகளை எச்சரிப்பாக கூறும் ஊழி யர்களையும் வெறுத்துத் தள்ளுகின்றார்கள். பிரியமானவர்களே, நீங்க ளோ, வேதத்தை தினமும் வாசித்து, உங்கள் வாழ்க்கையை அந்த வார் த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பாருங்கள். மனதைக் கடினப்படு த்தாமல், தேவ ஆவியானவரின் வழிநடத்துதலை கேளுங்கள். மனத் தாழ்மையோடு தேவனுடைய வார்த்தைக்கு இணங்குங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, என் மனம் விரும்பியத்தை பேசும் இடங்களை தெரிந்தெடுக்காமல், உம்முடைய சத்திய வார்த்தையை கலப்பில்லாமல் பேசும் இடங்களிலே நான் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 3:15