புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 19, 2022)

அருமையான ஆலோசனைகள்

சங்கீதம் 139:17

தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்


தன் குடும்ப வைத்தியரை காணச் சென்ற மனிதனானவனொருவன், நல்ல செய்தியையும், தான் ஆறுதலடையும்படிக்கு இனிய வார்த்தைக ளையும் கேட்க ஆவலாக இருந்தான். சாந்த குணமுள்ள அந்த குடும்ப வைத்தியரும், அவனுடைய ஆரோக்கியத்தைக் குறித்து பேசும் போது, அவன் சரீரத்திலே நன்றாக இருக்கும் பல காரியங்களை அவனுக்கு சொன்னார். அதற்காக மாத்திரமா மனி தர்கள் வைத்தியரைக் காணச் செல் கின்றார்கள்? இல்லை, அந்த மனித னானவன், நன்மையானவைகளை கேட்க விரும்பிய போதும், அவன் சரீரத்திலே ஆரோக்கியத்திலே குறை வுகள் உள்ள பகுதிகளையும் குறித்து நிச்சயமாக அவனுக்கு எடுத்துக் கூற வேண்டும். ஒருவேளை அவனுக்கு அது கசப்பான செய்தியாக இருந்தாலும், வைத்தியர் உண்மையை எடு த்துக் கூறுவார் அல்லவா! ஆம், இன்று உலகிலே வாழும் சில தேவ பிள்ளைகளும், நன்மையானவைகளையும், தங்கள் செவிகளுக்கு இனி மையானவை களையும் மட்டுமே கேட்க விரும்புகின்றார்கள். தங்கள் வாழ்க்கையிலே, தங்கள் தங்கள் குடும்பங்ளை சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுவிட்டு, அது தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, அதைக் குறித்து யாரும் பேசக் கூடாது என்று தங்கள் உள்ளத்திலே தீர்மானம் செய்து விடுகின்றார்கள். அல்லது, தேவன் இப்படியாக, இன்னார் வழியாக மட்டுமே நம்மோடு பேச வேண்டும் என்று தங்கள் இருதயங்களிலே நிச் சயித்துக் கொள்கின்றார்கள். ஆனால் நம்மை நேசிக்கும் பரம வைத்தி யராகிய இயேசுவோ, மனிதர்கள் ஒருவரும் கெட்டுப் போகாமல் நித் திய ஜீவனை அடைய வேண்டுமென்பதற்காகவே தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்தார். அந்த அன்புக்கு ஈடான அன்பு எங்கும் இல்லை. அவர் அன்புள்ளவராக இருப்பதினாலே, நாம் தம்முடைய சாயலிலே வள ருவதற்கு நம் வாழ்க்கையிலே தடையாகவும், குறையாவும் இருக்கும் காரியங்களை தெட்டத் தெளிவாக தம்முடையவர்களுக்கு வெளிப்படு த்துகின்றவராயிருக்கின்றார். உண்மையானது ஒருவேளை கேட்பதற்கு கசப்பானதாக இருக்கலாம். ஆனால், அதை ஏற்றுக் கொண்டு, தங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து, கர்த்தருடைய வழிக்கு திரும்புகின்றவர்கள், நித்திய நன்மையை கண்டடைகின்றான். பிரியமானவர்களே, கர்த்தரு டைய வழிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி உங்களை ஒப்புக் கொடு ங்கள். அவர் தம்முடைய விருப்பம் போல நம்மை நடத்தி, முடிவிலே, நித்திய மகிமையிலே சேர்த்துக் கொள்வார்.

ஜெபம்:

என்னைப் பேர்சொல்லிக் அழைத்த தேவனேஇ உம்முடைய அருமையான ஆலோசனைகளையும்இ உம்முடைய எச்சரிப்பின் சத்தத்தையும் நான் உணர்ந்து அதன்படி என் வாழ்வை மாற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 28:23

Category Tags: