தியானம் (புரட்டாசி 18, 2022)
கர்த்தருக்குள் பெருகுகின்றவர்களாயிருங்கள்
1 கொரிந்தியர் 15:58
நீங்கள் உறுதிப்பட்டவர்க ளாயும், அசையாதவர்களா யும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.
இன்று பல மனிதர்கள் குற்ற உணர்வு இல்லாமல் பாவம் செய்யும் வழியை தேடுகின்றார்கள். ஏனெனில், பெரும்பான்மையானோரின் வாக்குகளோடு, தேவனாகிய கர்த்தர் தாமே அநீதி என்றும் பாவம் என்றும் விலக்கிய காரியங்களை, நீதி என்று கூறி சட்டங்களைக் கூட அமுல்படுத்தி வருவதை நாம் செய்திகள் வாயிலாக அறிகின்றோம். மேலும், கர்த்தரை அறிந்திருக்கின்றோம் என்று கூறும் சில மனிதர்கள் கூட, கிறிஸ்தவத்தின்; அடிப்படைக் கொள்கைகளை குறித்து, பல விதண் டாவாதமான கேள்விகளை கேட்டு, அவைகளை தங்கள் இஷ;டப் படி விமர்சிக்கின்றார்கள். நாகரீகம் என்ற போர்வையின் கீழே தங்கள் இச்சைகளை நிறைவேற்ற வழி தேடு கின்றார்கள். ஜாதிகள் கொந்த ளித்து, ஜனங்கள் விருதாக்காரியத் தைச் சிந்திப்பானேன்? கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேக ம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என் கிறார்கள். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர் களை இகழுவார் (சங்கீதம் 2:1-4). இப்படி பெரும்பான்மையானோர் தேவ னுக்கு விரோதமாக எழுந்தாலும், தேவ பயத்துடன் வாழும் நாமோ, நாம் ஆதியிலே கொண்ட அன்பையும், தேவனைக் குறித்த பக்தி வைரா க்கியத்தையும் விட்டு விலகிப் போய்விடக்கூடாது. அந்தகார இருளிலி ருந்து ஆச்சரியமான ஒளிக்கு நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். பிர காசமு ள்ள மனக் கண்களையுடையவர்கள், தங்கள் பாதையிலே, பட்ட பக லிலே இடறிவிழாமல், நிதானமாக நடக்கும் மனிதர்களைப் போல, தேவனுடைய வழியிலே நடந்து செல்கின்றார்கள். இவர்கள் உள்ளத்தில் திவ்விய ஒளி பிரகாசிப்பதால், இவர்கள் உள்ளத்தில் இது பிழையா? அது சரியா? அதை செய்தால் என்ன தவறு? என்ற கேள்வி களுக்கு இடமிருக்காது. இருளில் நடக்கின்றவர்கள் தாங்கள் இடறி விழுவது மட்டுமல்லாமல், தங்களோடு மற்றவர்ளும் இடறி விழும்படி கிரி யைகளை நடப்பிக்கின்றார்கள். பிரியமான சகோதரரே, கர்த்தரு க்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்பதை திட்டமாக அறிந்து உறுதியுள்ளவர்களாய் அவருடைய கிரியைகளிலே பெருகுவீர்களாக.
ஜெபம்:
நித்திய வாழ்வுக்கென்று நம்மை வேறு பிரித்த தேவனே, நாம் அறிந்த சுவிசேஷத்தை மறுபடியும் பற்றிக் கொண்டு, அதிலே உறுதியாய் நிலைத்திருந்து, நற்கிரியைகளிலே பெருகும்படி வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலி 1:28-30