புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 17, 2022)

செம்மையானவர்களின் வம்சம்

நீதிமொழிகள் 19:17

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்;


தன் சிறு பிரயாத்திலிருந்து கடும் வறுமையிலும் பல கஷ்டத்திலும் மத்தியிலே வாழ்ந்து வந்த தேவ பக்தியுள்ள மனிதனானவனொருவன், தன் வாழ்க்கையிலே படிப்படியாக முன்னேற்றமடைந்து, அவன் வாழ் ந்து வந்த பிரதேசத்திலே வசதியுள்ள மனிதர்களிலொருவனானான். தான் பட்ட கஷ;டங்களை தன் பிள்ளைகள் படக்கூடாது என்று தனக்கு ள்ளே நிர்ணயம் செய்து கொண்டு, தன் பிள்ளைளுக்கு வேண்டிய இவ்வுலக பொக்கிஷங்களை, அவர்கள் சிறு பிள் ளைகளாக இருக்கும் போதே, அவர் கள் கல்விக்கும், திருமணத்திற்கும், இதர தேவைகளுக்குமென்று செல்வத்தை சேமித்து வைத்தான். தனக்கும் தன் பிள்ளைகளின் வாழ்விற்கும் என்று சொத்துக்களை சேர்த்து வைப்பதில் தவறேதும் இல்லை என்பது பொதுவான கருத்தாக இருக்கின்றது. ஆனால், பசி என்றால் என்ன? பட்டினி என்றால் என்ன? வறுமையினாலே உண் டாகும் அவமானங்களும் நிந்தைகளும் என்ன என்று நன்கு அறிந்த அந்த மனிதனானவன், ஆண்டுகள் கடந்து செல்லும் போது, தன்னை ப்போல பல பாடுகள் மத்தியிலே வாழ்ந்து வரும் மனிதர்களை மற ந்து, அந்த பிரதேசத்திலே சிறப்பு குடிமகனானான். தன் சந்தததிக்கு பல ஆண்டுகளுக்கு பின் உண்டாகும் தேவைகளுக்கு வேண்டியதை சேமித்த அந்த மனிதனானவன், தற்போது உண்ண உணவு, உடுக்க உடை, தங்க தகுந்த வீடு இல்லாமலும், மற்றும் அப்படிடைக் கல்வி கற்பதற்கு முடியாமலிருக்கும் சக ஏழைகளையோ மறந்து போனான். பிரியமான சகோதர சகோதரிகளே, இன்று சிலர் கர்;த்தரால் ஆசீர்வதிக் கப்பட்டேன் என்று கூறி, தங்கள் சொத்துக்களை தங்களுக்கு பின்வரும் தங்கள் சந்ததிகளுக்கென்றே விட்டு செல்கின்றார்கள். அது அவர்களு டைய தனி ப்பட்ட தீர்மானம். ஆனால் நாம் யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய காரியங்கள் உண்டு. இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதிலுள்ளவைகள் யாவும் அக்கினிக்கு இரையாக வைக்கப்ப ட்டிருக்கின்றது. (2 பேதுரு 3:7) இவ்வண்ணமானகயுவே பூவுல செல்வம் யாவும் ஒரு நாள் அழிந்து போகும். பரம பிதாவினுடைய பொக்கிஷ ங்கள் ஒரு காலத்திலும் அழிந்து போவதில்லை. தேவனுடைய நீதிமான் நித்தம் இரங் கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிறன்றான். அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப் பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். கர்த்தருடைய அழியாத நித்திய ஆசீர்வாதம் அவன் சந்ததி மேலே இருக்கும்.

ஜெபம்:

இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ள தேவனே, நான் எப்போதும் உம்முடைய திவ்விய சுபாவங்களிலே வளர்ந்து பெருகின்ற உம்முடைய செம்மையான வம்சத்தானாக விளங்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 112:1-10