புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 16, 2022)

நித்திய ஜீவனைப் பொக்கிஷமாக்குங்கள்

1 தீமோத்தேயு 6:19

நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.


இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து வந்த ஐசுவரியமுள்ள ஒரு மனுஷனும், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலி ருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்த லாசரு என்னும் தரித்திரனுடைய சம்பவத்தையும் குறித்து நாம் அறிந்திருக்கின்றோம். இன் றைய நாட்களிலும், ஆண்டவர் இயேசுவை அறிந்த சிலர் மிகை யான ஐசுவரியத்திலும், வேறு சிலரோ கடும் வறுமையி லும் தங்கள் வாழ்நாள் முழு வதும் வாழ்ந்து இந்த உலகத் தைவிட்டு கடந்து செல்கின்றார்கள். ஐசுவரியம் நிறைவாக உள்ளவர் கள், தேவன் தங்கள் கையின் பிரயாசத்தை ஆசீர்வதித்திருக்கின்றார் என்று கூறிக் கொள்கின்றார்கள். அது உண்மையாக இருக்கலாம். அப்ப டிப்பட்டவர்கள், தேவன் ஏன் தமக்கு மிகையான செல்வத்தை கொடுத் திருக்கின்றார் என்பதை அறி ந்து, தேவனுடைய சித்தத்தை நிறைவே ற்றுவது அவர்களுக்கு நன்மை யாக இருக்கும். ஏனெனில், ஐசுவரிய வான்களை குறித்த எச்சரிப்பை வேதம் விருதாவாக வழங்கவில்லை. எனவே, அவனவன் தன்தைத் தானே ஆராய்ந்து அறிந்து, இவ்வுலக த்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தை யுள்ளவர்களாயி ராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமா ய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாரா ளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்க ளுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்கால த்திற்காகத் தங்க ளுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக் கவும் அவர்களுக்குக் கட்டளையிடும்படி சத்திய வேதம் அறிவுரை கூறுகின்றது. வேதவாக்கி யங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அந்த வாக் கியங்களிலுள்ள அறிவுரைகளின்படி வாழ்பவன் ஞானமுள்ளவனாக இருக்கின்றான். தேவ பிள்ளையென்று தன்னை சொல்லி கொள்பவன் எவனும், தன்னுடைய பிதாவாகிய தேவனைப் போல இரக்கத்தில் செல்வந்தனும், மன்னிப்பதில் வள்ளலும், நற்கிரியை களிலே ஐசுவரியவானுமாக இருக்கக்கடவன்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, இந்த உலகத்தில் என் நிலைமையையும் தகமையையும் நான் நோக்கி பார் க்காமல், உம்மேல் நம்பிக்கை வைத்து வாழ பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 12:33-34