புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 15, 2022)

இரகசிய வாழ்க்கை

வெளிப்படுத்தல் 3:15

நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.


சனிக் கிழமை காலையிலே, பக்கத்து ஊருக்கு அவசர அலுவலாக சென்றிருந்த தேவ ஊழியரொருவர், மாலையிலே, அந்த ஊரிலுள்ள விசுவாசக் குடும்பமொன்றை சீக்கரமாக சந்தித்து விட்டு தனது ஊருக்கு திரும்பலாம் என்று தனக்குள் எண்ணிக் கொண்டு, அந்த குடும்பத்தாரின் வீட்டிற்கு சென்று, வாசல் கதவைத் தட்டினார். தன்னுடைய நண்பர்கள் சிலரை எதிர்பார்ததிருந்த அந்த வீட்டு க்காரன், சீக்கிரமாக சென்று கதவை திறந்தான். சபையின் போதகரை கண் டதும், அவன் அதிர்ச்சியடைந்தான். என்ன போதகர் ஐயா, முன்னறிவிப்பு ஏதுமில்லாமல், நாங்கள் ஆயத்தமில் லாதிருக்கும் போது, திடீரென்று வரு கை தந்திருக்கின்றீர்கள் என்று மனம் சலித்துக் கொண்டான். அதற்கு போதகர்: ,ல்லை, ,வவளவு தூரம் வந்துவிட்டு, எப்படி உங்களை சந் திக்காமல் செல்வது என்று நினைத்தேன் என்றார். எதிர்பாராத விதமாக போதகரை கண்ட அந்த வீட்டுக்காரன் அதிர்ச்சியடைந்தது போல, அந்த வீட்டில் நடந்து கொண்டிருந்த ஒன்றுகூடலை கண்ட போதரும் கூட சற்று அதிர்ச்சியடைந்தார். தன்னுடைய ஊர் நண்பர்களோடு சேர்ந்து, தன்னு டைய பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த அந்த விசுவாசியா னவன், நண்பர்களுக்கு மதுபான குடிவகைகளை பரிமாறியதோடு குடி த்து வெறித்து திரைப்பட பாடல்களை பாடி களியாட்டத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். விசுவாசியானவன் தான் தவறு செய்து விட்ட தைக் குறித்து மனம் வருந்துவ தற்கு பதிலாக, முன்னறிவிப்பில்லாமல், போதகரா னவர் தன் வீட்டிற்கு வந்தது ,ங்கிதமற்ற செயற்பாடு என்று போதரை குற்றம் சாட்டி அவர் மேல் கோபம் கொண்டான். ,ந்த விசுவா சியான வனுடைய வாழ்க்கை தேவனுக்கு முன்பாக உத்தமாக ,ருந் தால் அவன் யாருக்கு அஞ்ச வேண்டும்? பிரியமானவர்களே, ,ன்று சில மனிர்க ளுடைய வாழ்க்கை முறை ,ப்படியாகவே ,ருக்கின்றது. தங்கள் மாம்ச ,ச்சைகளை நிறைவேற்ற வேண்டும் என்னும் ஆசை அவர்கள் உள்ளத்தில் உண்டு, அதே வேளையிலே தங்களை பரிசுத்த வான்களாக என்று காண்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. ,தனால் குளிருமின்றி அனலுமின்றி வெது வெதுப்பாயிரு க்கின்ற வாழ் க்கை வாழ்கின்றார்கள். பிரியமானவர்களே, உங்கள் வாழ்வின் தெரிவு கள் உங்களுடையது. சில வேளைகளிலே மற்றய மனிதர்களுக்கு தெரி யாத ,ரகசிய வாழ்க்கையை நாம் வாழலாம் ஆனால் சகலமும் அறிந்த சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு மறைவான காரியங்கள் ஒன்றுமில்லை என்பதை திட்டமாக அறிந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

வாசற்படியிலே நின்று இதயக் கதவை தட்டுகின்ற தேவனே, உம்முடைய சத்தத்திற்கு என் இருதயத்தை திறந்து, உம் வார்த்தையி ன்படி ஜெயங்கொள்ளுகின்ற வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளி 3:14-22