புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 14, 2022)

ஏன் பயப்படுகின்றீர்கள்?

யாக்கோபு 4:8

இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.


இளவயதைக் கொண்ட வாலிபனானவன், தன் வாழ்க்கையைக் குறி த்தும், தன் தேவனிடத்தில் தனக்கிருக்கும் விசுவாசத்தைக் குறித்தும் மிக வும் தைரியத்தோடு, ஆலயத்திலுள்ள விசுவாசகள் மத்தியிலே பேசி வந்தான். அவனுடைய மனஉறுதியை கண்டு பலர் ஆச்சரியப்பட்டார் கள். ஒரு நாள் இவ்வண்ணமாக, தன் வீட்டிலே வந்த சில சபை விசு வாசிகளோடு அவன் பேசிக் கொண்டிருக்கும் போது, அந்த இளம் வாலி பனுடைய நண்பர்கள் சிலர் அங்கே வந் துவிட்டார்கள். நண்பர்களைக் கண் டதும், அவனது முகபாவனை வேறுப ட்டிருப்பதையும், அவன் விசுவாசத் தைக் குறித்தும், தேவ காரியங்களைக் குறித்தும் பேசுவதற்கு சற்று தயங்குவ தையும் சபை விசுவாசிகள் அவதானித்தார்கள். அவன் உடனடியாக தன்னை சுதாகரித்துக் கொண்டு நாட்டு நடப்புக்க ளையும்;, விளையாட்டு செய்திகளையும் குறித்தும் பேச ஆரம்பித்துவிட்டான். காரணம் என்ன வெனில், அவன் தன் நண்பர்கள் மத்தியில் சாட்சியுள்ள வாழ்க்கை வாழாதபடியால், தேவ காரியங்களை பற்றி பேசுவதை நண்பர்கள் கேட் டால், தன்னை ஏளனம் செய்வார்கள். தன்னுடைய உண்மை நிலை iயை சபை விசுவாசிகளும், தன் நண்பர்களும் அறிந்து விடுவார்கள் என்றும் பயந்தான். பிரியமானவர்களே, இப்படியாக சில மனிதர்கள் தங்கள் வாழ்க்கையிலே இரண்டு வேடங்கள் போட்டு வாழ்ந்து வருகி ன்றார்கள். இந்த உலகத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் விட்டு விட மனதில்லாததால், இந்த உலகத்தின் வழிகளிலே தங்கள் வாழ்க் கையைக் கெடுத்துக் கொண்டிருப்பவர்களுடன் நட்பு கொண்டாடும்படி வழிகளை தேடி, அவைகளை நியாயப்படுத்த முயற்சி செய்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள், தாங்கள் உண்மையற்ற வாழ்க்கை வாழ்கின்றோம் என்று தங்கள் உள்ளத்திலே அறிந்திருக்கின்றபடியால், பயமுள்ள ஆவி தங்களை ஆட்கொள்ள இடங்கொடுக்கின்றார்கள். இதனால் இவர்கள் பிசாசின் கிரியைகளுக்கு பயப்படுகின்றார்கள். பிசாசானவனுக்கு சொந் தமானவைகள் நம்மிடத்தில் இருந்தால் நாம் அவனுக்கு பயப்பட வேண்டும். ஆனால், நாம் இயேசுவுக்கு சொந்தமாக நம்மை முற்றிலும் ஒப்புக் கொடுக்கும் போது, பிசாசானவனுக்கு சொந்தமானவைகள் நம் மிடம் ஏதும் இல்லாதிருப்பதால், நாம் பிசாசானவனுக்கோ, அவனுடைய கிரி யைகளுக்கோ பயப்படத் தேவையில்லை. ஆகையால், தேவ பிள்ளைகளே, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்திருங்கள்;. இயே சுவின் நாமத்திலே எப்போதும் பிசானவனக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.

ஜெபம்:

இருதயத்தின் ஆழங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, இரு மனமுள்ளவனாக, நான் இருளிலே தடுமாறகின்றவனாக வழிகளை தெரிந்து கொள்ளும் எண்ணத்தை என்னைவிட்டு முற்றிலும் அகற்றி விடுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2