புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 13, 2022)

வாழ்வின் வழிகாட்டி

யோவான் 6:63

இயேசுகிறிஸ்து: நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.


ஒரு சமயம் பவுல், சீலா என்னும் தேவ ஊழியர்கள், மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறின துமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தார்கள். அந்நாட்களிலே, ஒய்வு நாளிலே பட்டணத்திற்கு வெளியே போய், ஜெபம் பண்ணுவதும், அங்கு கூடி வந்திருப்பவ ர்களுக்கு உபதேசிப்பதும் அவர்களு க்கு வழக்கமாயிருந்தது. ஒருநாள் அவர் கள் ஜெபம் பண்ணும்படி போகை யில், குறிசொல்ல ஏவுகிற ஆவி யைக்கொண்டிருந்து, குறிசொல்லுகி றதினால் தன் எஜமான்களுக்கு மிகு ந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் அவர்களுக்கு எதிர்ப்பட்டாள். அவள் தேவ ஊழியர்களை பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன் னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறி விக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். இப்படியாக அநேகநாள் செய்து கொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று. பிரியமானவர்களே, குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந் திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிட த்தில் குறிகேட்கிறவனும் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பான வர்கள். இப்படிப்பட்டவர்கள் மெய்யான தேவனாகிய கர்த்தருடைய ஊழியர்கள் அல்லவே என்று பரிசுத்த வேதாமம் கூறுகின்றது. இவர்கள் எவ்விதமான வியத்தகு காரியங்களை நடப்பித்தாலும் இவர்களை நம் பாமலும், இவர்களை கண்டு அஞ்சாமலும், இயேசு கிறிஸ்துவின் நாம த்தில் வெற்றி சிறக்கின்றவர்களாக இருங்கள். பிலிப்பி பட்டணத்தி லிரு ந்த, அந்த குறி சொல்லுகின்ற ஆவியையுடைய பெண், தேவ ஊழிய ர்களை குறித்த உன்னதமான தேவனுடைய ஊழியர்கள் என்று போற் றிக் கூறினாள். அவள் சொன்னது மெய்யே ஆனால் அவளிடமிருந்தது தேவனுடைய தூய ஆவியல்ல. இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளே ஆவியும் ஜீவனுமாயிருருக்கின்றது. அவைகளே, சமாதானமான வாழ் விற்கு வழிகாட்டுகின்றது. வாழ்வை கொடுக்கின்றது. அவருடைய வார்த்தையின்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்கின்றவன், கன்மலை யின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷக்கு ஒத்திருக்கின் றான். எனவே அந்த ஜீவ வார்த்தைகளையே பின்பற்றுங்கள்.

ஜெபம்:

கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமான வசனங்களை தந்த தேவனேஇ அசுத்த ஆவிகளின் கிரியைகளை சற்றும் பின்பற்றாமல்இ உம் வார்த்தையிலே நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபா 18:9-12