புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 12, 2022)

இயேசுவின் நாமத்தில் வெற்றி

2 தீமோத்தேயு 1:7

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.


ஒரு சமயம் ஆண்டவர் இயேசுவும், அவருடைய சீஷர்களும் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டிற்குள் வந்தார்கள். இயேசுவா னவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனு ஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவனு டைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந் தது. அவனைச் சங்கிலிகளி னாலும் கட்ட ஒருவனாலும் கூடாதி ருந்தது. அவன் அநேகந்தரம் விலங் குகளினாலும் சங்கிலிகளினாலும் கட் டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறி த்து, விலங்குகளைத் தகர்த்துப் போடுவான்; அவனையடக்க ஒருவ னாலும் கூடாதிருந்தது. அவன் எப் பொழுதும் இரவும் பகலும், மலைக ளிலும் கல்ல றைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப் படுத்தி க்கொண் டிருந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்து கொண்டு: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தா தபடிக்கு தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார். பிரியமானவர்களே, உன்னதமான தேவனுடைய குமாரனாகிய இயே சுவின் சந்நிதியிலே பிசாசுகள் பயந்து நடுக்குகின்றன. ஆண்டவராகிய இயேசு வழியாக நாமும், உன்னதமான தேவனுடைய குமாரர்களும், குமாரத்திகளுமாகும் தகுதியை பெற்றிருக்கின்றோம். பரலோக தேவனை நோக்கி அப்பா பிதாவே என்று கூப்பிடும் புத்திர சுவிகாரத்தின் அதி காரத்தை இலவசமாக தேவன் நமக்னு கொடு த்திருக்கின்றார். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்த ப்படுகிறார்களோ, அவர் கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். எனவே, பிசாசுகளையும் அவ னுடைய கிரியைகளையும் கண்டு, திரும்ப வும் பயப்படுகிறதற்கு நீங் கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றிருக்கின் றீர்கள். நம்மோடு இருக்கும் ஆண்டவர் இயேசு பெரியவராயிரு;கின்றார். இந்த உலத்திலுள்ள ஜனங்கள் அசுத்த ஆவிகளின் கிரியைகளைக் கண்டு திகிலடைந்து, அடங்கிப் போவதைப் போல, நீங்கள் அசுத்த ஆவிகளின் கிரியைகளுக்கு பயப்படாதிருங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெயம் கொள்ளுங்கள்.

ஜெபம்:

அப்பா பிதாவே, நீர் எனக்கு கொடுத்திருக்கும் மேன்மையை நான் மறந்து போய், இந்த உலகத்தில் நடப்பவைகளை கண்டு கலங்கிப் போகாதபடிக்கு, உம் வார்த்தையிலே உறுதியாய் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:14-15