புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 11, 2022)

தேவனுடைய பிள்ளைகளே பயப்படாதிருங்கள்

எண்ணாகமம் 23:21

அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்


'அவனொரு பொல்லாத மனுஷன், செய்வினை, பில்லிசூனியம் செய்வதில் தேர்ச்சி பெற்றவன். அவனோடு; பிரச்சனை எதற்கு? அவன் எனக்கு தீவினையை செய்து விடுவான் அல்லது சபித்து விடுவான்' என்று ஒரு மனிதனானவன் ஒரு மந்திரவாதியைக் குறித்து கூறிக் கொண்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, குறி சொல்லுதல், நாள் பார்த்தல், பில்லிசூனியம் மற்றும் எத்தகைய மந்திர வித்தைகளைக் குறித்த பயம் உங்கள் உள்ளத்தில் உண்டா? இன்னார் நம்மை சபித்து விடுவார்கள் என்ற கலக்கம் மன தில் ஏற்படுவதுண்டா? ஆண்டவர் இயேசுவை உங்கள் சொந்த இரட் சகராக ஏற்றுக் கொண்ட நீங்கள், இயேசு கிறிஸ்துவிடம் இருந்த தேவ னுடைய ஆவியை பெற்றிருக்கின்றீர்கள். அதனால், சர்வ வல்லமை யுள்ள பிதாவாகிய தேவனுடைய பிள்ளைகளாக்கப்பட்டிருக்கின்றீர்கள். அப்படியானால், மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும், எப்படிப்பட்ட தீய சக்திகளும் உங்களை மேற்கொள்ள முடியாது. அது மட்டுமல்ல, எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்து க்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தையுடைய இயேசுவின் நாமத்தை தரித்து கொண்ட ஜனங்களைக் கண்டு, தீய ஆவிகள் பயந்து நடுங்;குகின்றன. எனவே இயேசு கிறிஸ்து வின் நாமத்தை தரித்திருக்கின்ற நீங்கள், அவரிலே நிலைத்திருந்து வாழும் போது, எந்த தீய சத்திகளைக் குறித்தும் பயப்படாதிருங்கள். இயேவின் நாமத்தினாலே, இயேசுவின் தூய இரத்தத்தினாலே அவை களை அதட்டி அகற்றிவிடுங்கள். நீங்கள் அவைகளுக்கு பயப்படத் தேவையில்லை மாறாக அவைகளே இயேசுவின் சீஷர்களைக் கண்டு பயந்து ஓடிவிடுகின்றன. அன்றும் இன்றும் என்றும், மெய்யான தேவ னாகிய கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய பாதுகாப்பிற்குள் இருக் கின்றார்கள். யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ர வேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலை யும் குறித்துச் சொல்லப்படும். தேவ ஜனங்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்க ளுக்குள்ளே இருக்கிறது. எனவே, தேவ பிள்ளைகளாகிய நீங்கள் தீய சக்திகளுக்கோ அவைகளை செய்பவர்களுக்கோ பயப்படாதிருங்கள்.

ஜெபம்:

எல்லா நாமத்திற்கும் மேலாக இயேசுவின் நாமத்தை எமக்கு தந்த தேவனே, தீய சக்திகளை கண்டு பயப்படாமல், இயேசுவின் நாமத்திலே ஜெயங்கொண்டு வாழ என்னை உணர்வுள்ளவனாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:10-11