தியானம் (புரட்டாசி 10, 2022)
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
எண்ணாகமம் 22:12
கர்த்தர்: அவர்கள் ஆசீர்வ திக்கப்பட்டவர்கள் என்றார்.
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து புறப்பட்டு வந்த தேவ ஜனங்கள், வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அருகிலேயுள்ள எரிகோவின் கிட்ட இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாப்பியர்கள் இருந்த இடத் தின்; சமனான வெளிகளில் பாளயமிறங்கினார்கள். மோவாபின் ராஜா வாகிய பாலாக்கும்; அவன் ஜனங்களும் மிகவும் பயந்து, தேவ ஜனங்க ளைக் குறித்து கலக்கமடைந்தார்கள். அதனால், மோவாப்பின் ராஜா, தேவனுடைய ஜனங்களை சபித்தால், ஒருவேளை தனக்கு ஜெயம் கிடைக் கும் என்று எண்ணி, அவர்களை சபிக்கும்படிக்கு, பேயோரின் குமாரனாகிய பிலேயாம் என்னும் மனிதனை அழைப்பிக்கும்படி தன்னுடைய ஸ்தானாதிபதிகளை அவனிடத்திற்கு அனுப்பி னான். அந்த ஸ்தானதிபதிகள், பிலேயாம் என்னும் மனிதனுக்கு கொடு க்கும்படிக்கு, குறி சொல்லுதலுக்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத் துக் கொண்டு, அவனை அழைத்து வரப் புறப்பட்டார்கள். ஆனால் தேவ னோ, தம்முடைய ஜனங்களை நீ சபிக்கக்கூடாது என்று எச்சரிப்பை பிலேயாமிற்கு தெளிவாகக் கொடுத்திருந்தார். அவர்கள் அவனை வரு ந்திக் கேட்டதால், அவன் அவர்களோடு போகச் சம்மதித்து, தன் கழு தையின்மேல் ஏறி பிரயாணம் பண்ணினான். போகும் வழியிலே, கர்த்த ருடைய தூத னானவர் வழியிலே, உருவின பட்டயத்தோடு, அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் அதைக் காணமுடியவில்லை, ஆனால் அவன் ஏறி பிரயாணம் செய்த கழுதையோ, தேவ தூதனை கண்டு மிர ண்டு விலகிப்போயிற்று. அதனால் அவன் கழுதையை மூன்றுமுறை அடித்தான். உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்;. அப் போது பேசாத மிருகம் மனுஷர் பேச்சைப் பேசித் தீர்க்கதரிசி என்று கருதப்பட்ட பிலேயாமின் மதிகேட்டைத் தடுத்தது. அது பிலேயாமைப் பார்த்து: பிலேயாமின் வழி கர்த்தருக்கு மாறுபாடாயிருக்கிறதினால் (எண் 22:32), கர்த்தருடைய தூதன் அவனுக்கு விரோதமாக வந்தார் என்பதை அவனுக்கு உணர்த்தியது. பிரியமானவர்களே, தேவனாகிய கர்த்தர், தம்முடைய ஜனங்கள் என்று ஒரு கூட்டத்திற்கு முத்திரை போட் டிருக்கும் போது, யார் அவர்களை எதிர்த்து நிற்க முடியும்? தம்முடைய ஜனங்களை எதிர்த்து பேசும் மாறுபாடுள்ள சிந்தையுள்ளவர்களுக்கு பேசாத மிருகங்களைகூட அவர்களுக்கு விரோதமாக எழுப்புவார். தேவ ஆசீர்வாதம் நம்மேல் இருக்கும் போது, யாரும் நம்மை சபிக்க முடியாது. எனவே, தேவ ஜனங்களாகிய நாம், அநீதத்தின் கூலியை விரும்பி தன்னுள்ளதில் மாறுபாடான சிந்தையைக் கொண்ட பிலேயாமை போல வாழாமல் (2 பேதுரு 2:15-16), தேவனுடைய பிள்ளைகளாக அவரைச் சார்ந்து வாழ்வோமாக.
ஜெபம்:
ஜெபம்: செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும் என்று வாக்கு ரைத்த தேவனே, செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து போகாமல், எப்போதும் உம்முடைய நாமத்தை தரித்தவர்ளாக வாழ கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 பேதுரு 2:15-16