புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 09, 2022)

வாழ்வின் முக்கிய திருப்பங்கள்

1 தெசலோனிக்கேயர் 5:21

எல்லாவற்றையும் சோதித் துப்பார்த்து, நலமான தைப் பிடித்துக்கொள்ளுங்கள்


ஒரு இளம் மனிதனானவன், தன் இரண்டு நண்பர்களோடும் கூட, அயலிலுள்ள நாட்டின் ஒரு குறித்த பிரதேசத்திற்கு கருத்தரங்கொன் றிற்கு செல்வதற்காக, ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய தந்தையானவர் அவனை நோக்கி: மகனே, நீங்கள் நூற்றுக் கணக்கான மைல்களுக்கு காரை ஓட்டிச் செல்ல வேண்டும பட்டணத்தை தாண்டிய பின்பு, எல்லா பாதைகளும் பரந்த பிரதேசமாகவும், மலையும், காடும், வெளியுமாக காணப்படும். எனவே, இரவிலே பயணம் செய்து கொண் டிருக்கும் நீங்கள், திருப்ப வேண் டிய முக்கிய இடங்களை குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஒரு பிழை யான திருப்பம் உங்களை வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்லும். நூற்றுக் கணக்கான மைல்களை தாண்டிய பின்பு தான் நீங்கள் தவறான பதைக்குள் பல மணிநேரங்கள் ஓடி வந்திருக்கின்றீர்கள் என்று அறிந்து கொள்வீர்கள் என்று அவர் அறிவுரை கூறினார். தந்தையின் அறிவுரையை அவர்கள் தட்டிக் கழிக்க வில்லை ஆனால், நண்பர்களாக கூடி போகும் பரவசத்திலே, அவர்கள் பலவிடயங்கள் குறித்து பேசி, பாடல்களை பாடி, களிப்புடன் சென்று கொண்டிருக்கும்போது, நள்ளிரவுக்கு பின், பாதையை கவனிக்காமல், ஒரு திருப்பத்தை பிழையாக எடுத்ததால், ஏறத்தாழ ஆறு மணித்தியால ங்கள், தவறான பாதையிலே, சராசரியாக 100 மைல் வேகத்திலே ஓடிச் சென்ற பின்பு, தாங்கள் பிழையான திருப்பத்தை எடுத்துவிட்டோம் என்று காலையிலே உணர்ந்து கொண்ட போது, மிகவும் மனம் வருந்தி னார்கள். பிரியமானவர்களே, நம்முடைய வாழ்வின் பிரதானமான நோக் கம் என்ன? நாம் தேவனுடைய சித்தத்தை நம்முடைய வாழ்விலே பூர்த் தியாக்கி, பரம தேசமாகிய பரலோத்திலே நித்திய வாழ்வை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நம்முடைய ஜீவ யாத்திரையின் நோக்கமா யிருக்கின்றது. இந்த உலகத்திலே நமது வாழ்க்கையிலே அநேக தெரி வுகளும், திருப்பங்களும் உண்டு. அவற்றுள் பல வஞ்சனையான திருப் பங்களும் உண்டு. அது உடனடியாக வாழ்க்கையிலே நமக்குத் தெரிவ தில்லை. ஆனால், பல ஆண்டுகள் கடந்த பின்பு, நாம் நம் வாழ்க் கையை பிழைய திசைக்கு திருப்பி விட்டோம் என்று அறிந்து கொள் வோம். எனவே, தேவன் குறித்த, இடுக்கமான வாசல் வழியாக நாம் செல்லும்படிக்கு, அனுதினமும் வேதத்தை தியானித்து, ஜெபிக்க வேண் டும். வாழ்விலே திருப்பங்களை எடுக்க வேண்டிய நேரத்திலே விழிப்பு ள்ளவர்களாக இருங்கள். தேவ ஆலோசனைகளை கவனமாக பற்றிக் கொண்டு தேவனோடு நடப்போமாக.

ஜெபம்:

வழிகாட்டும் தீபமாகிய உமது ஜீவ வார்த்தைகளை தந்த தேவனே, நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால், நான் விழிப்புடன் இருந்து, சரியான தீர்மானங்களை என் வாழ்விலே எடுத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 32:8