புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 08, 2022)

மனதுருக்கமுள்ள பரம தந்தை

சங்கீதம் 103:9

அவர் எப்பொழுதும் கடிந் துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.


மருத்துவ சோதனைக்காக தன்னிடம் வந்த மனிதனொருவனை சந்தித்த வைத்தியர், அவனைப் பார்த்து, உன்னுடைய உடல் ஆரோக்கியம் இன்னும் நன்றாக இருக்கின்றது ஆனால், உனது இரத்த சோதனை அறிக்ககையின்படி, உன் உடல்நிலை தவறான பாதையிலே போவ தாக தெரிகின்றது. அதனால் நீ உன் னுடைய ஆரோக்கியத்தை குறித்து மிகவும் கவனமெடுக்க வேண்டும். நீ குடித்து வெறிப்பதை விட்டுவிட்டு, நீ உண்ணும் உணவு வகைகளை குறி த்து எச்சரிக்கையாயிரு என்று அவ னுக்கு மருத்துவ ஆலோசனையை வழங்கினார். அவனோ, அதைக் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளா மல், தன் இஷ;டப்படி வாழ்ந்து வந்தான். பல ஆண்டுகளுக்கு பின், வைத்தியர் கூறியது போல, கடும் நோய் அவனைப் பற்றிக் கொண்டது. போவதற்கு வேறு வழி தெரியாமல், அதே வைத்தியரை சந்திக்கும்படி அவன் மறுபடியும் சென்றிருந்தான். அவனைக் கண்ட வைத்தியர், சற்று விசனமடைந்து, அவனை கடிந்து கொண்டார். ஆயினும், அவனுடைய நிலையை கண்டு பரிதாபமடைந்து, அவனுக்கு உதவி செய்யும்படிக்கு அவனோடு பேசினார். உன்னுடைய நோய் கடுமையாக இருக்கின்றது. ஆனால், நான் என்னால் முடித்த வைத்தியங்களை உனக்குச் செய் வேன். உன் உடலிலே ஏற்பட்டிருக்கும் இடைவிடாத நோவுகளை குறை ப்பதற்கு நான் உனக்கு மாத்திரைகளை தருகின்றேன் என்று கூறினார். பிரியமானவர்களே, பாருங்கள், அந்த வைத்த்தியர் மனிதனாக இருந் தும், மனதுருக்கமுடையவராக, தன்னிடத்தில் வருகின்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகள் செய்ய வேண்டும் என்ற மனநிலையுடை யவராக இருந்தார். அப்படியானல், ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய வாழ்வையடைய வேண்டும் என்பதற்காக, தன் ஏக குமாரன் இயேசுவையே பலியாக ஒப்புக் கொடுத்த தேவன், நம்மேல் எப்போதும் கோபமாயிருப்பாரோ? இல்லை, அவர் நல்ல தந்தையைப் போல நம்மை கடிந்து கொண்டாலும், அவர் மனதுருக்கமுடையவராக இருந்து, தம்மிடம் வருகின்ற ஒருவரையும் ஒரு போதும் தள்ளிவிட மாட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிற துபோல, நம் முடைய பரம் தந்தையும், தமக்கு பயந்து தம்மிடம் வருகின்றவர்களை ஒரு போதும் தள்ளிவிட மாட்டார்.

ஜெபம்:

தாய் மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்று கூறிய தேவனே, நான் உம்மைவிட்டு தூரம் செல்லும் தவறான சிந்தனைகள் என்னைவிட்டு நீங்கும்படியாக மனக் கண்களைத் தெளிவாக்குவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 49:15-16