புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 07, 2022)

எக்காலத்திலும் அடைக்கலமானவர்

சங்கீதம் 62:5

என் ஆத்துமாவே, தேவ னையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.


உனது நண்பர்கள் யார் என்பதைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிரு. தேவனுக்கு பயந்த நடக்காத மனிதர்களின் வழிக்கு ஒருபோதும் இணங்காதே, அவர்கள் உன்னை வேதனையான வழிக்கு படிப்படியாக நடத்துவார்கள் என்று கூறிய தகப்பனானவருடைய ஆலோசனைகள், ஒரு இளம் மனிதனுடைய மனதிலே ஒலித்துக் கொண்டேயிருந்தது. என் தகப்பனுடைய புத்தியைக் கேட்கவில்லை. என் தாயின் போதகத்தைத் தள்ளிவிட்டேன். ஆசிரியரின் அறிவுரையை அசட்டை செய்தேன். போதருடைய வழிடத்து தலை பின்பற்றாது போனேன். மூப்பர்களின் ஆலோசனைகளுக்கு மனதை கடினப்படுத் தினேன் என்று அவன் தான் தேவ னுடைய வார்த்தைகளுக்கு விரோத மாக வாழ்ந்த வாழ்கையை பற்றி சிந்தித்து வெகுவாய் வாதிக்கப்பட் டான். தேவனுடைய சித்தத்தை தன் வாழ்விலே செய்யவில்லையே என்று மிகவும் கவலையடைந்தான். இனி என்னதை செய்வது? யாரிடம் இதை கூறவது? எப்படி வெளியே முகத்தை காண்பிப்பது? இப்படியே வாழ்ந்து விடுவோம் என்று சிந்தித்துக் கொண்டிக்கும் வேளையிலே, 'எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதய த்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.' என்ற வார்த்தை அவனுக்கு ஞாபகம் வந்தது. அந்த வார்த்தையிலே 'எக்கால த்திலும்' என்ற சொல்லு, அவன் மனதிற்கு புதிதானதொரு புத்துணர்ச் சியை கொடுத்தது. நான் தவறான வாழ்க்கையை பல வருடங்களாக வாழ் ந்து என் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுக்கா மல் போனது உண்மை. அது இறந்த காலம். ஆனால் இந்த காலத் திலே, இந்த உளையான சேற்றில் நான் இருக்கும் காலத்திலே, என் தேவனை என் தேவனையே நோக்கி பார்ப்பேன். இந்தக் காலத்திலே தேவனுடைய சித்தத்தை செய்யும்படிக்கு அவருடைய வார்த்தைக்கு செவிகொடுப்பேன் என்று தீர்மானம் செய்து கொண்டான். கடந்தகாலத்திலே, ஒரு வேளை தேவனைவிட்டு தூரமாக சென்றிருக்கலாம். தவறு கள் நடந்தது உண்மையாக இருக்கலாம் அதனால் நாம் அப்படியே தவறுகளிலே வாழத் தேவையில்லை. ஏனெனில் தம்மை உண்மையாக நோக்கிப் பார்க்கின்றவர்களின் சத்தத்தை கேட்டு, அவர்களை அரவணைத்துக் கொள்ள, நம்முடைய பிதாவாகிய தேவன்தாமே எப்போதும் ஆயத்தமுள்ளவராகவே இருக்கின்றார். எனவே தேவனிடத்திலே சேருங்கள்.

ஜெபம்:

உளையான பாவ சேற்றிலிருந்து என்னை தூக்கி எடுத்த தேவனே, பெலவீனமான நேரங்களிலே, நான் பின்னிட்டு, எனக்கு இனி வாழ்வில்லை என்று எனது வாழ்வை நான் அழித்துப் போடாமல் உம்மிடம் திரும்ப கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 145:18